பண்பாட்டுச் சொத்து
பண்பாட்டுச் சொத்து (Cultural property) என்பது, ஒரு குழு அல்லது சமூகத்தின் பண்பாட்டு மரபுரிமையின் ஒரு பகுதியாகிய இயற்பியப் பொருட்கள் ஆகும். இது, வரலாற்றுக் கட்டிடங்கள், கலை ஆக்கங்கள், தொல்லியல் களங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றை உள்ளடக்குகிறது.
வரைவிலக்கணம்
தொகு1954 இன் ஆயுதப் போராட்டங்களில் பண்பாட்டுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஹேக் உடன்படிக்கையின் முதல் விதி பண்பாட்டுச் சொத்து என்பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறது:[1]
" மூலம், உடமையாளர் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் "பண்பாட்டுச் சொத்து" என்னும் சொல் பின்வருபவற்றை உள்ளடக்குகிறது:
(அ) மதம் சார்ந்த அல்லது மதச் சார்பற்ற கட்டிடக்கலை, கலை அல்லது வரலாற்று நினைவுச்சின்னங்கள்; தொல்லியல் களங்கள்; முழுமையாக வரலாற்று அல்லது கலைத்துவ முக்கியத்துவம் கொண்ட கட்டிடத் தொகுதிகள்; கலை ஆக்கங்கள்; வரலாற்று அல்லது தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட கையெழுத்துப்படிகள், நூல்கள் அல்லது பிற பொருட்கள்; என்பவற்றோடு அறிவியல் சேகரிப்புக்களும் நூல்கள் அல்லது ஆவணங்கள் அல்லது மேலே விபரித்த சொத்துக்களின் படிகள் ஆகிய முக்கிய சேகரிப்புக்களும்;
(ஆ) துணைப் பத்தி (அ) இல் விபரிக்கப்பட்ட அசையும் பண்பாட்டுச் சொத்துக்களைப் பாதுகாப்பதையும் காட்சிக்கு வைப்பதையுமே முக்கிய நோக்கமாகக் கொண்ட அருங்காட்சியகங்கள், பெரிய நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், ஆயுதப் போராட்டக் காலத்தில் துணைப் பத்தி (அ) இல் விபரித்த அசையக்கூடிய பண்பாட்டுச் சொத்துக்களை வைப்பதற்கான ஒதுக்கிடங்கள் போன்ற கட்டிடங்கள்;
(இ) 'நினைவுச்சின்னங்களைக் கொண்ட மையங்கள்' என அறியப்படவுள்ள, துணைப்பத்திகள் (அ) இலும் (ஆ) இலும் விபரிக்கப்பட்ட பண்பாட்டுச் சொத்துக்களைப் பெருமளவில் கொண்ட மையங்கள்."