பதங்கமாதல்

பதங்கமாதல் என்பது, ஒரு தனிமம் அல்லது சேர்வை (சேர்மம், compound), திண்ம நிலையிலிருந்து, நீர்ம நிலைக்குச் (திரவ நிலை) செல்லாமல் நேரடியாகவே வளிம நிலைக்குச் (வாயு நிலை) செல்வதாகும். இது, முந்நிலைப் புள்ளி (?) (triple point) க்குக் குறைந்த வெப்பநிலையிலும், அமுக்கத்திலும் நிகழ்கிறது.

வழமையான அமுக்க நிலைகளில், பெரும்பாலான சேர்வைகளும், தனிமங்களும் மூன்று வேறுவேறான வெப்பநிலைகளில், மூன்று வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானவற்றில், திண்மநிலையில் இருந்து வளிம நிலைக்கான மாற்றம், இடைப்பட்ட நீர்ம நிலையூடாகவே நிகழ வேண்டியிருக்கிறது. ஆனால், சில பொருட்களைப் பொறுத்தவரை சில அமுக்க நிலைகளில், திண்மத்திலிருந்து, வளிம நிலைக்கு நேரடியான நிலை மாற்றம் நிகழ்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அமுக்கம் பதார்த்தத்தின் (substance)ஆவியமுக்கம் ஆகும்.

கற்பூரம், அயோடின் முதலானவை பதங்கமாதலுக்குள்ளாகும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதங்கமாதல்&oldid=2933796" இலிருந்து மீள்விக்கப்பட்டது