பதாகம் (Pathakam) என்பது பரதநாட்டியத்தின் உருப்படிகளில் ஒன்றான ஒற்றைக்கை முத்திரைகளில்(அஸம்யுத ஹஸ்தம்) ஒன்றாகும். இது கொடி எனும் கருத்தைக் குறிக்கிறது.[1] இது பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.

பதாகம் (முத்திரை)

பதாக விநியோகங்கள்

தொகு

பதாகத்தில் நாற்பத்தியொரு விநியோகங்கள் உள்ளன. பதாக விநியோகங்களின் ஸ்லோகம் மற்றும் கருத்து கீழே தரப்பட்டுள்ளன.

ஸ்லோகம்:-

நாட்டியாரம்பே வாரிவாகே வனே வஸ்துநிசெதனே/
குஜஸ்தனே நிசாயாம்ச நத்யாம் அமரமண்டனே//
துரங்கே கண்டனே வாயவ் சயனே/
கமநோத்யமே பிரசாபேச்ச பிரசாதேச்ச சந்த்ரிகாயாம்//
கனாத்தபே கபாட்டபாட்டனே சப்தவிபக்ஜர்த்தே தரங்ககே வீதிப்ப்ரவேசபாவேபி/
சமத்வேச்ச அங்கராதகே ஆர்த்மாத்தே சபதேசாபி//
துஸ்நிபாவநிதர்சனே தாளபத்ரெச்ச கேடேச்ச த்ரவ்யாதிர்ப்பர்சநேத்ததா/
ஆசீர்வாதக்ரியாயாம் நிருபச்டச்தேச்ஜபாவனே தத்ரதத்றேசிவசனே சிந்த்வ்து//
சுக்ருதிக்ரமே சம்போதனே ப்ரோகேபி கட்கரூபஷ்யதாரானே/
மாசே சம்பத்சரே வர்சதினே சம்மார்த்தநேத்ததா//

ஸ்லோகம் கருத்து
நாட்டியாரம்பே நடனத்தின் ஆரம்பம்.
வாரிவாகே மேகம்.
வனே வனம்.
வஸ்துநிசெதனே பொருட்களை வேண்டாம் எனக்கூறல்.
குஜஸ்தனே மார்பு.
நிசாயாம்ச இரவு.
நத்யாம் நதி.
அமரமண்டனே தேவலோகம்.
துரங்கே குதிரை.
கண்டனே வெட்டுதல்.
வாயவ் காற்று.
சயனே நித்திரை செய்தல்.
கமநோத்யமே முன் செல்லல்.
பிரசாபேச்ச புகழ்தல்.
பிரசாதேச்ச அனுகூலம்.
சந்த்ரிகாயாம் நிலவொளி.
கனாத்தபே வெப்பம்., கடும் சூரிய ஒளி.
கபாட்டபாட்டனே கதவை மூடித்திறத்தல்.
சப்தவிபக்ஜர்த்தே வேற்றுமை உறுப்பு.
தரங்ககே சிறு அலைகள்.
வீதிப்ப்ரவேசபாவேபி வீதியில் பிரவேசித்தல்.
சமத்வேச்ச சமத்துவம்.
அங்கராதகே உடலின் அங்கங்களை தொடுதல்.
ஆர்த்மாத்தே தன்னைக் குறித்தல்.
சபதேசாபி சபதம்
துஸ்நிபாவநிதர்சனே அமைதி
தாளபத்ரெச்ச பனை ஓலையில் எழுதுதல்.
கேடேச்ச கேடயம்.
த்ரவ்யாதிர்ப்பர்சநேத்ததா பொருட்களை தொடுதல்.
ஆசீர்வாதக்ரியாயாம் ஆசீர்வதித்தல்.
நிருபச்டச்தேச்ஜபாவனே அரசனைப்போல் பாவனை செய்தல்.
தத்ரதத்றேசிவசனே இங்கு அங்கு எனல்.
சிந்த்வ்து கடல் அலைகள்.
சுக்ருதிக்ரமே நல்ல செயல்.
சம்போதனே ஒருவரை விழித்தல்.
ப்ரோகேபி முன்னோகிச்செல்லல்.
கட்கரூபஷ்யதாரானே வாளும் கேடயமும் ஏந்தல்.
மாசே மாசம்.
சம்பத்சரே வருடம்.
வர்சதினே மழைநாள்.
சம்மார்த்தநேத்ததா நிலத்தைத் துப்பரவாக்கல்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0314.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாகம்&oldid=1987561" இலிருந்து மீள்விக்கப்பட்டது