பதானி சமந்தா கோளரங்கம்
பதானி சமந்தா கோளரங்கம் (Pathani Samanta Planetarium) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரத்தில்அமைந்துள்ளது. இது வானியலாளர் பதானி சமந்தாவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இரவு நேரத்தில் வானத்தில் நட்சத்திரங்களைக் காண்பது, ஒளி ஒலி காட்சி மற்றும் சுவரொட்டி காட்சிகள் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விண்வெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இக்கோளரங்கம் நிறுவப்பட்டது.[1] இங்கு பல்வேறு வானியல் சாதனங்களும் காட்சியில் உள்ளது.
இந்த கோளரங்கம் ஒடிசா அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையால் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "#009 – Visit Pathani Samanta Planetarium". 101Bhubaneswar. பார்க்கப்பட்ட நாள் 30 March 2017.