பதினாறு இராச்சியங்கள்

பதினாறு இராச்சியங்கள் என்பது சீன வரலாற்றில் கி. பி. 304 முதல் கி. பி. 439 வரையான நிலையற்ற காலத்தில் நிறுவப்பட்ட அரசுகளை குறிப்பதாகும். இக்காலத்தில் வட சீனாவின் அரசியல் அமைப்பானது நிலையற்றதாக இருந்தது. தொடர்ச்சியாக சிறிது காலமே நிலைத்திருந்த அரசமரபுகள் நிறுவப்பட்டன. இந்த அரசுகள் பெரும்பாலும் ஐந்து காட்டுமிராண்டிகளால் நிறுவப்பட்டன. இவர்கள் ஆன் சீனர் அல்லாத மக்கள் ஆவர். வட மற்றும் மேற்கு சீனாவிற்கு முந்தைய நூற்றாண்டுகளில் குடிபெயர்ந்தனர். ஆரம்ப 4ஆம் நூற்றாண்டில் மேற்கு சின் அரசமரபு தூக்கியெறிதப்பட்டதில் இவர்கள் பங்கெடுத்தனர்.[1][2]

"பதினாறு இராச்சியங்கள்" என்ற சொற்கள் முதன் முதலில் 6ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் சுயி காங்கால் அவரது புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டன. அவை ஐந்து லியாங்குகள் (முந்தைய, பிந்தைய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு), நான்கு யான்கள் (முந்தைய, பிந்தைய, வடக்கு மற்றும் தெற்கு), மூன்று சிங்குகள் (முந்தைய, பிந்தைய மற்றும் மேற்கு), இரண்டு சாவோக்கள் (முந்தைய மற்றும் பிந்தைய), செங் ஆன் மற்றும் சியா.

சீனாவில் மேற்கு சின் அரசமரபின் வீழ்ச்சி மற்றும் காட்டுமிராண்டி அரசுகளின் எழுச்சியானது ஐரோப்பாவில் ஹூனர்கள் மற்றும் செருமானிய பழங்குடியினங்களின் படையெடுப்பு காரணமாக ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்ததை ஒத்ததாக உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுமே 4 முதல் 5ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்றன.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினாறு_இராச்சியங்கள்&oldid=3358249" இலிருந்து மீள்விக்கப்பட்டது