பதிப்புரிமை மீறல்
பதிப்புரிமை மீறல் (Copyright infringement) என்பது பதிப்புரிமைச் சட்டத்தினுள் அடங்கும் எந்தவொரு விடயத்தினையும், தவறான முறையில் உரிமையாளரின் அனுமதி இன்றிப் பயன்படுத்தல், மாற்றங்கள் செய்தல், காட்சிப்படுத்தல், பிரதி செய்தல் ஆகும். இது சட்டத்தினை மீறிய ஒரு செயற்பாடு ஆகும். மேலும் பதிப்புரிமையை மீறும் போது பல நாடுகளில் பல்வேறுபட்ட தண்டனைகளும் வழங்கப்படுவதுண்டு. பதிப்புரிமை மீறல் செயற்பாடு கொள்ளை (piracy) எனவும் திருட்டு (theft) எனவும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றது.[1]