பத்தி ஜி
பத்தி ஜி அல்லது பத்தி ஜி மகராஜ் குஜராத்தின் நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். இவர் குஜராத் பகுதியின் புகழ்பெற்ற போர் வீரர் மற்றும் கதைத்தலைவர் ஆவார்.
புராணச்செய்திகள்
தொகுநாட்டுப்புற கதைகளின் படி, பத்தி ஜி ராஜபுத்ர குலத்தி்ன் உட்பிரிவான ரத்தோட் எனும் குலத்தில் தாகூர் தக்காட்சிங் ஜி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கும் கன்குப்பா என்னும் பெண்ணிற்கும் திருமணம் நடந்தபோது, தம்பதிகள் ஏழடி ஒன்றாக எடுத்து வைக்கும் சடங்கில், நான்காவது அடி நடந்தபோது, கபத்வஞ்சை சேர்ந்த முகமதிய அரசன் தனது கிராமத்தின் பசுக்களைச் சிறைபிடித்ததை அறிந்தார். உடனே, தன் திருமணத்தைக் கூட நிறைவு செய்யாமல் தனது வாளுடன் குதிரையேறி புறப்பட்டார். பசுக்களைச் சிறைமீட்டு படையையும் தோற்கடித்தார். ஆனாலும், அந்தப் போரில் தலைதுண்டிக்கப்பட்டு இறந்தார். பசுக்களை விடுவித்த பிறகே அவரது வீரமரணம் நிகழ்ந்தது.[1] 'பத்தி ஜி'யின் தலையற்ற உடல் தொடர்ந்து முகமதிய படைக்கு எதிராகப் போராடி அவர்களை அழித்தது குறித்த பல நாட்டுப்புற பாடல்கள் வழங்கி வருகின்றன.[2]
மரபு
தொகுபத்தி ஜி பசுக்களையும், தன்னை நம்பும் மக்களையும் காக்கும் நாட்டார் தெய்வமாக தொடர்ந்து வழிபடப்பட்டு வருகிறார். இவரை வழிபடுவர்களை பாம்பின் விடம் தீண்டாது என்பது அவரை வழிபடும் ரத்தோட் ராஜ்புத்ர, சௌராஷ்டிர மற்றும் குலட்வேத மக்களின் நம்பி்க்கையாகும்.[1][3]
புவா என்னும் பிரிவினர் சாதி வேறுபாடின்றி பத்திஜி வழிபடுகிறார்கள். தீய ஆவிகளை விரட்டும் வேலைகளை மேற்கொள்பவர்களான புவாக்கள், பத்திஜி போன்ற நல்ல ஆவிகளால் தங்களுக்கு அற்புத சக்தி கிட்டுவதாக நம்புகிறார்கள்.[4]
பத்தி ஜி குடும்ப உறுப்பினர்களின் நோயைத் தீர்க்கும் பொருட்டு இந்து மக்களால் வழிபடப்படுகிறார். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளின் நோய் தீர்க்கவும் புவாக்கள் இவரை வழிபடுகின்றனர். பசு, எருமை, அல்லது குடும்ப உறுப்பினர் நோயால் பாதிக்கப்பட்டால். அது தீய ஆவியின் வேலையாகவோ அல்லது முன்னோர்களின் சாபமகவோ இருக்கலாம் என்று இம்மக்கள் நம்புகின்றனர். தீய ஆவிகள் இந்த ஆற்றல்மிக்க தெய்வத்தால் தண்டிக்கப்படும் என்று புவா என்னும் ஆவிகளை விரட்டும் பிரிவினர் நம்புகின்றனர்.[4]
பத்திஜி யின் உருவப்படம் ஒரு போர்வீரரின் தோற்றத்துடன் அவர் குதிரை மீது அமர்ந்த படி வலது கையில் வாளை உயர்த்தி பிடித்தவண்ணம் காணப்படுகிறது.[4]
2002 இல், அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பாக்வெல்லில் உள்ள பாத்திஜி கோவிலில் இருந்து தனது கௌரவ யாத்திரையை கொடியசைத்து தொடங்கினார்.[1][5]
பத்தி ஜி சேனா என்ற பெயரில் பத்திஜியின் பின்பற்றுபவர்களின் அமைப்பும் உள்ளது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Fernando Franco; Jyotsna Macwan; Suguna Ramanathan (2004). Journeys to Freedom: Dalit Narratives. Popular Prakashan. pp. 295–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85604-65-7. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
- ↑ India Today. Thomson Living Media India Limited. 2002. p. 194. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
- ↑ Journal of Indian History. Department of Modern Indian History. 1983. p. 208. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
- ↑ 4.0 4.1 4.2 Man & Development. Centre for Research in Rural and Industrial Development. 2004. pp. 18, 19. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
- ↑ Andy Marino (8 April 2014). Narendra Modi: A Political Biography: A Political Biography. HarperCollins Publishers India. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5136-218-0. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
- ↑ Outlook. Hathway Investments Pvt Ltd. 2002. p. 42. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.