பத்மவாசன் (ஓவியர்)

பத்மவாசன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் பிரபல ஓவியராக சில்பியின் ஒரே சீடர்.[1] இவர் காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்.

பத்மவாசன்
பிறப்புகிரிதரன்
அறியப்படுவதுஓவியம், சித்திரக்கதை
பெற்றோர்ப. முத்துக்குமாரசுவாமி

வாழ்க்கை வரலாறு தொகு

பத்மவாசனின் தந்தை ப. முத்துக்குமாரசுவாமி. இவர் பிரபலமான இசைக் கலைஞர். இவரது தாய் நளின ரஞ்சனி. இவர் ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பத்மவாசனின் இயற்பெயர் கிரிதரன். சில்பியின் இயற்பெயரான சீனிவாசன் என்பதையும், அவர் மனைவியின் பெயரான பத்மாவதியையும் இணைத்து சில்பியே இப்பெயர் வைத்தார்.

இந்து தமிழ் திசை நாளிதழில் அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் என்ற தலைப்பில் கோட்டோவியங்களை காட்சிப்படுத்தி 25 தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[2]

பொன்னியின் செல்வன் தொகு

கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தினை வரைகலை ஓவியமாக பத்மநாபன் வரைந்துள்ளார். இதனை சிக்ஸ்த் சென்ஸ்' பதிப்பகம் ஐந்து பாகங்களாக வெளியிட்டுள்ளது. தொகுப்பில் 1220 வண்ண ஓவியங்கள், நூற்றுக்கணக்கில் கருப்பு வெள்ளை ஓவியங்கள் உள்ளன.[3]

ஆதாரங்கள் தொகு

  1. என் ஊர்: ஓவியர் பத்மவாசன் - ந.வினோத்குமார் விகடன் 27/06/2012
  2. ஓவியர் பத்மநாபன். இந்து தமிழ் சிசை 20 Jun 2017
  3. ஓவியக் கடலில் பொன்னியின் செல்வன்!: 'சிக்ஸ்த் சென்ஸ்' வெளியீடு தினகரன் நாளிதழ் 13 ஜனவரி 2018 பதிப்பு

வெளி இணைப்புகள் தொகு

தி இந்து நாளிதழ் பத்மநாபன் படைப்புகள்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மவாசன்_(ஓவியர்)&oldid=3219615" இலிருந்து மீள்விக்கப்பட்டது