பத்மாவதி (Padmavathi; தெலுங்கு: పద్మావతి, சமஸ்கிருதம்: पद्मावती) என்பவர் வைணவ பெண் தெய்வமாவார். இவர் ஆகாசராஜன் எனும் சோழமன்னனுக்கும் தரணி தேவிக்கும் பூமாதேவியின் அம்சமாக மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் மனைவியும் ஆனவர். இவளை மங்கம்மாள் தாயார் என்றும் அழைக்கின்றனர்.[1][2][3]

பத்மாவதி
பத்மாவதி தாயார்
வேறு பெயர்கள்அலமேலு
வகைஇலக்குமி, வைணவம்
இடம்திருமலை
துணைவேங்கடாசலபதி
பெற்றோர்கள்ஆகாஷ ராஜா, தரணி தேவி
பத்மாவதி கோயில், திருச்சானூர்

பெயர்க் காரணம்

தொகு
 
பத்மாவதி தாயாரின் படம், கூடல் அழகர் கோயில், மதுரை

ஆகாசராஜன் ஏர் உழும் பொழுது கிடைத்த பேழையில், ஆயிரம் இதழ்க்கொண்ட தாமரை மலர் மீது கிடந்தமையால் அலர்மேல் மங்கை எனப்பெயரிட்டு வளர்த்தான். 'அலர்' என்றால் தாமரை, 'மங்கை' என்றால் நற்குணங்கள் பொருந்திய பெண். தாமரை மலர் மீது நற்குணங்கள் பொருந்திய பெண்ணாக வீற்றிருப்பவள் என்ற பொருளில் அலர்மேல்மங்கை என்று அழைக்கின்றனர். இப்பொருளைக்கொண்ட பதமே வடமொழியில் "பத்மாவதி" என்றும், அலர்மேல்மங்கை எனும் தமிழின் திரிபே "அலமேலு மங்கா" என தெலுங்கிலும் கன்னடத்திலும் அழைக்கப்பட்டுவருகிறது.

முன்வரலாறு

தொகு

திருமாலின் இராம அவதார காலத்தில் வேதவதி என்ற திருமாலின் பக்தை இராமரை திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் ராமன் தான் இந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதத்தை பூண்டுள்ளைமையால், அடுத்து வரும் கலியுகத்தில் தான் எடுக்கப்போகும் சீனிவாச அவதாரத்தில் இவளை ஏற்று மணம் முடிக்க வரம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

திருமணம்

தொகு

பத்மாவதியை மணம் முடிக்க திருமால் வெங்கடாசலபதியாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் எல்லைக்குட்பட்ட வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கி, பத்மாவதியை மணம் செய்து கொண்டார். இத்திருமணத்திற்காக குபேரனிடம் ஆயிரம் வராகன் பொன்னை கடனாகப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hinduism: An Alphabetical Guide".. (2010). Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6. 
  2. South India handbook: the travel guide by Robert Bradnock, Roma Bradnock.
  3. Pattanaik, D. (1999). Vishnu: an introduction. Mumbai: Vakils, Feffer and Simons. p. 69.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாவதி&oldid=4171058" இலிருந்து மீள்விக்கப்பட்டது