பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்
பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (Pandanallur Meenakshi Sundaram Pillai, 1869 - 1954) தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர் ஆவார். பரதத்தில் 'பந்தநல்லூர் பாணி' இவரால்தான் தோற்றுவிக்கப்பட்டது. பரதத்தில் மிகவும் தொன்மையான பாணி இதுவேயாகும். இவர் 'நடன குரு' என எல்லோராலும் சிறப்புடன் அழைக்கப்பட்டார். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர்.[1] இவர், தஞ்சாவூர் நால்வர் (நான்கு சகோதர்கள்: சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேல்) வழி வந்தவர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Elegance personified". The Hindu. 11 March 2005 இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606105120/http://www.hinduonnet.com/thehindu/fr/2005/03/11/stories/2005031101410300.htm.
- ↑ Urvi Pathak (2012). "Guru - Artistic Lineage". Satvikamshiva,.weebly.com.