பந்தல் குருவி

பந்தல் குருவி தொகு

 
பூனைக் குருவி (Cat bird)

23-30 செ.மீ நீளம் கொண்டது. ஆண் பந்தல் குருவி மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணக் கொண்டைப் பகுதிகளைக் கொண்டிருக்கும். வெளிப்புறத் தோற்றத்தில் இருபால் குருவிகளையும் எளிதில் பிரித்தறிய முடியாது. உணவாகப் பழங்கள், பூச்சிகளை உட்கொள்கின்றன.

கூடு தொகு

 
அவென்யூ பந்தல் குருவி (Avenue lower bird)

பந்தல் குருவியின் சிறப்புப் பண்பே கூடு கட்டுவதாகும். இக்கூடு ஏனைய பறவைகளிலிருந்து வேறுபடுகிறது. கூடு கட்டுவதற்கென்றே மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறது. சிறு குச்சிகள், இலை, புல் ஆகியவற்றைக் கொண்டு கட்டுகிறது. பல பொருட்களைக் கொண்டு கூட்டை அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் வைத்திருக்கிறது. கூடுகட்டுதலில் ஆண் பறவையின் பங்கே அதிகம். பெண் பறவை இதில் பங்கேற்பதில்லை. உறைவிடத்தைக் கூடு என்று சொல்வதை விட பந்தல் என்றே கூறலாம்.

வகைகள் தொகு

கூட்டின் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கலாம். பூனைக் குருவி (Cat bird), யார்டு பந்தல் குருவி (Yard lower bird), மேபோல் பந்தல் குருவி (Maypole lower bird), அவென்யூ பந்தல் குருவி (Avenue lower bird) என்பன.

பூனைக் குருவி (Cat bird) தொகு

குரல் பூனையின் குரலை ஒத்துக் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிகுந்துக் காணப்படுகிறது.

யார்டு பந்தல் குருவி (Yard lower bird) தொகு

வெப்ப மண்டலக் காடுகளிலும், வடக்கு ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது. ஆண் குருவியின் வாய்ப் பகுதிகளில் ரம்பம் போன்ற பற்கள் காணப்படுகின்றன. பந்தலைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட பகுதியை உருவாக்கிக் கொள்கிறது.

மேபோல் பந்தல் குருவி (Maypole lower bird) தொகு

கோபுரம் போன்ற அமைப்புகளை உருவாக்கும் தன்மையுடையது. உயரம் 1.2 - 1.8 செ.மீ. ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.

அவென்யூ பந்தல் குருவி (Avenue lower bird) தொகு

கொண்டைகள் கிடையாது. தமக்கென பாதுகாக்கப்பட்ட பகுதியை உருவாக்கிக் கொள்கிறது. இப்பகுதி 1 - 1.5 மீ சுற்றளவுடன் மலர்களாலான மெத்தை போன்று காணப்படும். இரண்டு குச்சிகளாலான சுவர்களையும், அவ்விரண்டு சுவர்களை இணைக்கும் பல கிளைகளையும் கொண்டு இதன் கூடு கட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மிகுந்து காணப்படும் பறவையாகும்.

[1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தல்_குருவி&oldid=3478741" இலிருந்து மீள்விக்கப்பட்டது