பந்தளம் தொங்கு பாலம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது

பந்தளம் தொங்கு பாலம் (Pandalam Suspension Bridge) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அச்சன்கோவில் ஆற்றைக் கடக்கும் ஒரு பாதசாரி தொங்கு பாலமாகும். இது ஐயப்பன் கோயிலையும் கைப்புழா சிறீகிருட்டிணா கோயிலையும் இணைக்கிறது.[1]

கேரளாவின் அகலமான தொங்கு பாலம் பந்தளம் தொங்கு பாலமாகும். கேரள மாநில வருவாய் மற்றும் நில அளவைத் துறையால் கட்டப்பட்ட இந்தப் பாலம் சுமார் 70 மீட்டர் (230 அடி) நீளமும் 2.5 மீட்டர் (8.2 அடி) அகலமும் கொண்டுள்ளது. இந்த இரும்பு தூக்கு பாலம் கேரள மாநில வருவாய் துறையின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.[2] [3][4]

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தளம்_தொங்கு_பாலம்&oldid=3741838" இலிருந்து மீள்விக்கப்பட்டது