பனார்சி பிரசாத் சின்கா
இந்திய அரசியல்வாதி
பனார்சி பிரசாத் சின்கா (Banarsi Prasad Singh; 7 நவம்பர் 1899 – 1964) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குப் பீகார் மாநிலத்திலுள்ள முங்கேர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் 1952, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3]
பனார்சி பிரசாத் சின்கா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1952–1964 | |
பின்னவர் | மது லிமேயி |
தொகுதி | முங்கேர், பிகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மில்கி கிராமம், காரக்பூர், பிகார், இந்தியா | 7 நவம்பர் 1899
இறப்பு | 1964 (வயது 64–65) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூலம்: [1] |
பல்வேறு காங்கிரசு இயக்கங்களில் பங்கேற்ற இவர் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.
சின்கா 1964-இல் இறந்தார். சின்கா மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் சோசலிச தலைவர் வெற்றி மது லிமாயி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha; India. Parliament. Lok Sabha. Secretariat (1957). Who's who. Lok Sabha. p. 447. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.
- ↑ Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. 1962. p. 517. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.
- ↑ Madras (India : State) (1961). Fort Saint George Gazette. p. 42. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.
- ↑ "1962 India General (3rd Lok Sabha) Elections Results".