பனாஸ் பால் பண்ணை
இந்தியாவின் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பால்பண்ணை தலைமையகம்
பனாஸ் பால் பண்ணை (Banas Dairy) (குசராத்தி: બનાસ ડેરી), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூர் நகரத்தில் அமைந்துள்ள கூட்டுறவு அமைப்பில் இயங்குகிறது.[2][3] இது குஜராத் அரசின் அமுல் பால் நிறுவனத்தின் ஒரு பிரிவு ஆகும். பனாஸ் கூட்டுறவு பால் பண்ணை 1969இல் நிறுவப்பட்டது. இப்பால் பண்ணையில் 5,000 பேர் பணி செய்கின்றனர். பனாஸ் கூட்டுறவு பால்பண்ணை நாள் ஒன்றுக்கு 50 இலட்சம் லிட்டர் பாலை கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது.[4]
பனாஸ் பால் பண்ணை | |
வகை | அமுல் நிறுவனததின் பிரிவு |
---|---|
நிறுவுகை | 1969 |
தலைமையகம் | பாலன்பூர், பனஸ்கந்தா மாவட்டம், குஜராத், இந்தியா |
முதன்மை நபர்கள் | சங்கர் சௌத்திரி (பெருந்தலைவர்)[1] பாவாபாய் ராப்பரி (துணைப்பெருந்தலைவர்) சங்கரம் சிங் ஆர். சௌத்திரி (மேலாண்மை இயக்குநர்) |
தொழில்துறை | பால் மற்றும் பால் பொருட்கள் |
வருமானம் | ▲ INR₹ 15,255 crore (2021–22) |
உரிமையாளர்கள் | அமுல், குஜராத் கூட்டுறவுத் துறை |
பணியாளர் | 5000 |
இணையத்தளம் | banasdairy |
தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளின்படி பனாஸ் கூட்டுறவு பால்பண்ணை நிறுவப்பட்டது.[5] இதன் தலைமையகம் பாலன்பூர் நகரம் ஆகும்.[6]
படக்காட்சிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "History made; Bhatol ousted from Banas dairy". 28 December 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
- ↑ "India's largest dairy company plans to double its output in ten years | IUF UITA IUL". cms.iuf.org. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Gujarat's Banas Dairy is Asia's No.1 in milk production".
- ↑ "Banas Dairy to pay Rs 1,144 crore to 3.5L milk farmers | Rajkot News - Times of India" (in en). The Times of India. 28 July 2020. https://timesofindia.indiatimes.com/city/rajkot/banas-dairy-to-pay-rs-1144-crore-to-3-5l-milk-farmers/articleshow/77205566.cms.
- ↑ "Gujarat's Banas Dairy is Asia's No.1 in milk production".
- ↑ "Gujarat's largest dairy distributes Rs 1,650 cr additional profit to its members". Deccan Herald (in ஆங்கிலம்). 2022-07-13. பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.