பனிச்சங்கேணி

பனிச்சங்கேணி என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஒரு கிராமம் ஆகும்.

இது கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறிய நிர்வாக நிலப்பரப்பாகும்.

இக்கிராமத்தில் கோயில் குடியிருப்பு,நடுக்குடியிருப்பு,சல்லித்தீவு என மூன்று பிரதான குடியிருப்புக்கள் காணப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் மீனபிடி தொழிலையே பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் இக்கிராமம் வரலாற்றுசிறப்புமிக்கது.இங்கு பனிச்சங்கேணி அரசி என்று அழைக்கப்படும் தமிழ் அரசியான வன்னிச்சி நாச்சி அரசி கி.பி 16ம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்துள்ளார்.[1]

மேலும் வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயமும் இங்கு காணப்படுகிறது. கதிர்காம பாதயாத்திரிகர்கள் இவ்வாலயத்தில் ஓய்வெடுத்து தங்களுடைய பாதயாத்திரையை தொடர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. "அரசி வன்னி நாச்சியாருக்கு சிலை".

வெளியிணைப்புகள்

தொகு

பனிச்சங்கேணி அரசி நூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிச்சங்கேணி&oldid=4045815" இலிருந்து மீள்விக்கப்பட்டது