பனித்தூபி
பனித்தூபி என்பது, பனிமலை வளர்க்கும் தொழில்நுட்பம் மூலம் செயற்கைப் பனிமலைகளை உருவாக்கும் முறை ஆகும். இவ்வாறு உருவாக்கப்படும் பனித்தூபியானது, கோடைகாலத்தில் நீர், பற்றாக்குறையாகக் காணப்படும் போது, பயிர்களுக்குத் தேவையான நீரை வழங்குகின்றது. லடாக் எனும் இடத்தில் வாழ்ந்துவந்த சோனம் வாங்சுக் எனும் பொறியியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பொறிமுறையினைத் தற்போது, அரசு சாராத அமைப்பான மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம், லடாக் நடாத்தி வருகின்றது. பனித்தூபி எனும் இத்திட்டம் 2013 ஒக்டோபரில் நிறுவப்பட்டு சனவரி 2014 இல் ஆரம்பமானது. நவம்பர் 15 ம் தேதி 2016, அன்று சோனம் வாங்சுக் ரோலக்ஸ் விருதுகள் நிறுவனத்தால் இப்பொறிமுறையை அறிமுகம் செய்ததற்காக விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். .
பனித்தூபித் திட்டம் | |
---|---|
வணிகம் | இல்லை |
திட்ட வகை | நீர்ப் பாதுகாப்பு |
இடம் | லடாக் |
Owner | மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம், லடாக் (SECMOL) |
Founder | சோனம் வாங்சுக் |
நாடு | இந்தியா |
Key people | Sசோனம் வாங்சுக் |
Established | அக்டோபர் 2013 |
Budget | கூட்டு நிதிநல்கை |
இணையத்தளம் | icestupa |
பின்னணி
தொகுலடாக் ஓர் குளிர்ப் பாலைவனம் ஆகும். இங்கு பயிர்கள் பயிரிடப்பட்டாலும், கோடைகாலங்களில் போதியளவு பயிருக்குத்தே வையான நீர் கிடைக்காமை, பயிர் செய்யும் மக்களுக்க்கு பிரதிகூலமாக அமைந்தது. எனவே இப்பிரச்சினையைப் போகும் பொருட்டு பல பொருளியலாளர்கள், பல முயற்சிகளையும், பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர். இவ்வாறு ஒரு முறை பாதை வழியே நடந்து கொண்டிருந்தபோது சோனம் வாங்சுக் அவர்கள் பாலம் ஒன்றின் கீழ் பனி உருகாது அவ்வாறே இருப்பதை அவதானித்தார். பனித்தூபிப் பொறிமுறை அறிமுகமானதன் முதலாவது படி இதுவே ஆகும். பின்னர் தான் அவதானித்த பனி உருகாமைக்கான காரணத்தை ஆராய்ந்து கண்டறிந்த சோனம் வாங்சுக், கூம்பு வடிவில் ஓர் குவியல் இருக்குமானால் அக்குவியல் இலகுவில் உருகாமலும் இருக்கும் என்பதையும் கண்டறிந்தார். இவ்வாறாக பனி உருகும் முறையின் பின்னணியை வைத்தே பனித்தூபி முறை கண்டறியப்பட்டது. [1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ice Stupas: Conserving water the 3 Idiots way". Forbes India. http://www.forbesindia.com/article/checkin/ice-stupas-conserving-water-the-3-idiots-way/39265/1. பார்த்த நாள்: 21 November 2016.
- ↑ "Sonam Wangchuk Wins the Rolex Award". thewire.in/. http://thewire.in/81327/wangchuk-rolex-stupa-secmol/. பார்த்த நாள்: 21 November 2016.
- ↑ "Ice Stupas: Water conservation in the land of the Buddha". indiawaterportal.org. http://www.indiawaterportal.org/articles/ice-stupas-water-conservation-land-buddha. பார்த்த நாள்: 21 November 2016.