பன்னாட்டுக் கண்காட்சி (1867)

பன்னாட்டுக் கண்காட்சி 1867 என்பது, 1867 ஏப்ரல் முதலாம் தேதி முதல் அதே ஆண்டு நவம்பர் 3ம் தேதிவரை பிரான்சின் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியைக் குறிக்கும். 42 நாடுகள் இக்காண்காட்சியில் கலந்துகொண்டன. இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசின் உச்சநிலையைக் குறிக்கும் முகமாக, பேரரசன் மூன்றாம் நெப்போலியனின் ஆணையைத் தொடர்ந்து 1864இலேயே ஏற்பாடுகள் தொடங்கின.

கண்காட்சி பாரிசு 1867
சாம்ப் டி மார்சில் அமைந்த முதன்மைக் கட்டிடம்
மேலோட்டம்
பி.ஐ.இ-வகுப்புபன்னாட்டு கண்காட்சி
பெயர்Exposition universelle
பகுதி68,7 எக்டேர்
கண்டுபிடிப்புநீரியல் உயர்த்தி, வலிதாக்கிய காங்கிறீட்டு
வருகையாளர்15,000,000
பங்குபற்றுவோர்(கள்)
நாடுகள்42
வணிகம்52,200
அமைவிடம்
நாடுபிரான்சு
நகரம்பாரிசு
இடம்சாம்ப்-டி-மார்சு
ஆள்கூறு48°51′21.7945″N 2°17′52.3703″E / 48.856054028°N 2.297880639°E / 48.856054028; 2.297880639
காலக்கோடு
தொடக்கம்ஏப்ரல் 1, 1867 (1867-04-01)
முடிவுஅக்டோபர் 31, 1867 (1867-10-31)
பன்னாட்டு கண்காட்சி
முந்தியது1862 பன்னாட்டுக் கண்காட்சி in இலண்டன்
அடுத்ததுWeltausstellung 1873 Wien in வியன்னா

தொடக்கம் தொகு

1864ல் மூன்றாம் நெப்போலியன், 1867ம் ஆண்டில் பாரிசில் பன்னாட்டுக் கண்காட்சியொன்றை நடத்தும்படி ஆணை பிறப்பித்தார். இளவரசர் ஜெரோம் நெப்போலியனின் தலைமையில் இதற்கென ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு முதற்கட்ட வேலைகள் தொடங்கின. 119 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிசின் இராணுவ அணிவகுப்புக்குரிய வெளியான சாம்ப் டி மார்சும், 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிலியன்கோர்ட் தீவும் கண்காட்சிக்கான இடமாகத் தேர்வாகியது. முதன்மைக் கட்டிடம் மூலைகள் வளைவாக அமைந்த செவ்வக வடிவம் கொண்டது. இதன் நீளம் 1608 அடிகள் (490 மீ), அகலம் 1247 அடிகள் (380 மீ). சுற்றிலும் பூங்காவும், அதைச் சுற்றிக் காட்சியரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. முதன்மைக் கட்டிடத்தை விட ஏறத்தாழ 100 சிறிய கட்டிடங்களும் கட்டப்பட்டன.

கண்காட்சியின் கட்டுமானத்துக்கும், பேணலுக்குமான நிதியில் $1,165,020 பிரான்சு அரசின் நன்கொடை, அதேயளவு தொகையைப் பரிசு நகரம் வழங்கியது, $2,000,000 பொதுமக்களிடம் இருந்தும் கிடைத்தது.

காட்சிப்பொருள்கள் தொகு

கண்காட்சியில் 50,226 காட்சிப்படுத்துவோர் பங்குபற்றினர். இவர்களில் 15,055 பேர் பிரான்சையும் அதன் குடியேற்ற நாடுகளையும் சேர்ந்தோர். 6176 பேர் பெரிய பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் சேர்ந்தோர். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 703 பேர் பங்குபற்றினர். முதன் முதலாக சப்பான் தனது தேசியக் காட்சிக்கூடத்தில் கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தது.[1] இவற்றில் பெரும்பாலானவை கியூசுவின் சட்சுமா, சாகா குலங்களைச் சேர்ந்தோருடையவை.

மேற்கோள்கள் தொகு

  1. "Welcome". Japanese art gallery in Paris - Yakimono. Archived from the original on 2014-05-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.