பன்னாட்டுக் கதிரியல் மாநாடு

பன்னாட்டுக் கதிரியல் மாநாடு (International congress of Radiology) என்பது கதிரியல் துறை மருத்துவர்கள் கூடி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள வாய்பான ஒரு மாநாடாகும். இந்த அமைப்பின் முதல் மாநாடு 1925-ல் இலண்டன் மாநகரில் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடிற்று. அடுத்த இரண்டாவது மாநாடு 1928-ல் ஸ்டாக்கோமில் நடந்தேறியது. 1953 -ம் வருடம் வரையிலும் மாநாட்டினை ஏற்பாடு செய்யும் நாட்டின் கதிரியல் கழகம் பொறுப்பேற்றது.

இரண்டாவது மாநாட்டில் (1928)மூன்று புதுக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.அவையாவன,

  • பன்னாட்டுக் கதிரியல் காப்புக் கழகம்.(ICRP)
  • பன்னாட்டுக் கதிரியல் அலகுக்களுக்கும் அளவீடுகளுக்குமான கழகம்.( ICRU)
  • பன்னாட்டுக் கதிரியல் கல்வி கழகம்.(ICRE)

இராண்ஜனால் எக்சு கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில நாள்களிலேயே அவை மருத்துவத்தில் பெரிதும் பயன்படத் தொடங்கின. பலநாடுகளிலும் கதிரியல் கழகங்கள் தோன்றின. முதல் உலகப் போரின் முடிவில் எக்சு கதிர்களின் செறிவை அளவிட பல அலகுகள் பரிந்துரைக்கப்பட்டாலும் ஒருமித்தக் கருத்து எட்டப்படவில்லை.

1940-ல் செருமனியின் பெர்லின் நகரில் கூடவிருந்த மாநாடு போர்காரணமாக்க் கூடமுடியாமற்போயிற்று. இந்த சமயம் பழைய மாநாடு பற்றிய பல தகவல்களும் தொலைந்து போயின.

1953 க்குப் பிறகு எல். எசு. டெய்லரின் சீரிய முயற்சியால் மாநாடு பத்துயிர் பெற்றது. இன்றளவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.