பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்

உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சூன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.[1] இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்சனைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும். பன்னாட்டுக் கைம்பெண்கள் நாளை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்களும் ஐ.நா.சபையில் பேசி வந்தனர். காபூன் நாட்டின் ம‌றைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்‌‌வையோ பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கைப்படி ஐ.நா.வின் பொதுச்சபைக்கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட 3வது குழுவின் அறிக்கையடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் சபையில் 23 டிசம்பர், 2010 அன்று ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேறியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Home". www.theloombafoundation.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.