பன்னாட்டு உறவுகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பன்னாட்டு உறவுகள் (International relations) என்பது நாடுகளுக்கிடையே உள்ள அரசியல், பொருளாதார, ராணுவ உறவுகளையும் நாடுகள் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள அரசியல் தொடர்புகளையும் குறிக்கும். இவை பற்றி ஆராயும் கல்வித் துறை ”பன்னாட்டு உறவுகள் துறை” என்றழைக்கப்படுகிறது

2012ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தின் செனீவாவில் உள்ள நாடுகளின் அரண்மனையில் 10000 அரசுகளிடையான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன[1]. மேலும் இந்நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அனைத்துலக அமைப்புகள் காணப்படுகின்றன[2]
பன்னாட்டு உறவு என்ற கருத்து முதல் உலகப்போருக்கு பின்தான் தோன்றியது உலகநாடுகளின் உறவு வெளிப்படையாக இருத்தல் அவசியம் என உற்றோவில்சன் வேர்சேல்சு உடன்படிக்கையில் தெரிவித்தார், அதன் பின் உலக நாடுகள் சங்கம், இரண்டாம் உலகப்போர், ஐநா, பனிப்போர், சோவியத் பிளவு, வளைகுடாப் போர் என பல நிகழ்வுகள் நடந்தேறின.