பன்னாட்டு ஒளி நாள்

பன்னாட்டு ஒளி நாள் (International Day of Light) ஒவ்வோர் ஆண்டும் மே 16 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. யுனெசுகோவின் கூற்றுப்படி, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், அமைதி மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதற்கான அதன் திறனைப் பயன்படுத்துவதையும் இந்நடவடிக்கை குறிக்கிறது.[1] ஒளி என்பது வாழ்க்கையின் உலகளாவிய அடையாளமாகும். கல்வி, அறிவியல், கலை, பண்பாடு, நிலையான வளர்ச்சி, தகவல் தொடர்பு, ஆற்றல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.[2] இது யுனெசுகோவும் இந்நாளை ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கிறது. [3] [4]

பன்னாட்டு ஒளி நாள்
International Day of Light
வகைமதச்சார்பற்றது
நாள்16 மே
நிகழ்வுஆண்டு
மூலம் தொடங்கப்பட்டதுஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
தொடர்புடையனஉலக மெய்யியல் நாள்

வரலாறு தொகு

1960 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று இயற்பியலாளர் தியோடர் மைமன் மற்றும் பொறியாளர் முதன் முதலில் சீரொளியை வெற்றிகரமாக செலுத்தியபோது யுனெசுகோவால் இம்முயற்சி எடுக்கப்பட்டது.[5] ஒளி முக்கியமானதாக கொண்டாடப்படுகிறது, ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில், மனிதர்கள் பிரபஞ்சத்தைப் பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் ஒளியை நம்பியிருந்நார்கள். பண்டைய நாகரிகங்கள் முதல் விண்மீன் கூட்டங்களுடன் இணைந்த நினைவுச்சின்னங்கள் வரை ஒளியின் மூலமே அறிந்து கொண்டார்கள். இன்றும் வானியலாளர்கள் விண்மீன் மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். [5]

ஒளி பற்றிய ஆய்வு நுண்ணோக்கிகள், எக்சு கதிர் இயந்திரங்கள், தொலைநோக்கிகள், புகைப்பட்டக் கருவிகள், மின் விளக்குகள், தொலைக்காட்சித் திரைகள் ஆகியவற்றை உருவாக்க ஒளி உதவியது. நம் உலகத்தை அசாதாரண வழிகளில் மாற்றவும் ஒளி உதவுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_ஒளி_நாள்&oldid=3506350" இருந்து மீள்விக்கப்பட்டது