பன்னாட்டு நூலகம் மற்றும் பண்பாட்டு மையம்

இந்தியாவின் சார்க்கண்டு மாநிலம் ராஞ்சியிலுள்ள ஒரு நூலகம்

பன்னாட்டு நூலகம் மற்றும் பண்பாட்டு மையம்  (The International Library & Cultural Centre) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்திலுள்ள ராஞ்சி நகரில் உள்ளது. 1995-ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சிக்குழு அதன் நிறுவனங்களை மூடியபோது இம்மையம் தொடங்கப்பட்டது.[1] ராஞ்சியில் பிரித்தானிய ஆட்சிக்குழு வளாகத்தில் உள்ள ஓர் அறக்கட்டளையால் பன்னாட்டு நூலகம் மற்றும் பண்பாட்டு மையம் நிருவகிக்கப்படுகிறது. இங்குச் சுமார் 36000 புத்தகங்கள் உள்ளன. [2]

பன்னாட்டு நூலகம் மற்றும் பண்பாட்டு  மையத்தில் பிரித்தானிய நூலகம்  மரபுவழியாக வழங்கிய கிட்டத்தட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. நூலகத்தில் பல்வேறு வகைகளில்  பலவிதமான புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. தேவையான நூல்கள் சேமிக்கப்பட்ட நூலகமாகவும் விரும்பத்தக்க அமைதியான வாசிப்பு அறை கொண்ட நூலகமாகவும் இந்நூலகம் இருக்கிறது என்பதை நூலகம் உறுதி செய்கிறது. நூலக நிருவாகம் மிகவும் சிறந்ததாகவும்  பரந்துபட்ட ஆய்வு சூழலையும் கொண்டுள்ளது.

நூலகத்தின் உறுப்பினர்களாக உள்ள 2000 பேரில் 75% பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "The Telegraph - Ranchi". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-13.
  2. "International Library helps students crack competitive exams - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-01-13.