பன்னாட்டு பல்கலைக்கழக விளையாட்டு நாள்

பன்னாட்டு பல்கலைக்கழக விளையாட்டு நாள் (International Day of University Sport) ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அனுசரிக்கும் ஒரு சிறப்பு நாளாகும். விடுமுறையுடன் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று இவ்விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது.

பன்னாட்டு பல்கலைக்கழக விளையாட்டு நாள்
International Day of University Sport
கடைப்பிடிப்போர்யுனெசுகோ, பன்னாட்டு பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பு
வகைபன்னாட்டளவில்
தொடக்கம்2016
நாள்20 செப்டம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்

பன்னாட்டு பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பு யுனெசுகோவிற்கு இதை முன்மொழிந்தது. 2015 ஆம் ஆண்டில் யுனெசுகோவின் பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன் முதலில் செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பன்னாட்டு பல்கலைக்கழக விளையாட்டு நாள் அனுசரிப்பு நடைபெற்றது.

பல்கலைக்கழக கல்வி நாட்காட்டியின் தொடக்கம் என்பது மட்டுமல்லாமல், முதல் உலக மாணவர் வெற்றியாளர் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன என்பதற்காகவும் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.[1][2]

பல்கலைக்கழகங்களில் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், சமூக சேவையில் விளையாட்டுக் கல்வியை ஒருங்கிணைப்பதில் பல்கலைக்கழகங்களின் சமூகப் பங்கையும் எடுத்துக்காட்டுவதே பன்னாட்டு பல்கலைக்கழக விளையாட்டு நாளின் நோக்கமாகும். விளையாட்டின் மதிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலின் மையமாக விளையாட்டை வைப்பதும் இதன் நோக்கமாகும்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "International Day of University Sport". www.fisu.net (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-06-14.
  2. "International Day of University Sport". UNESCO. Retrieved 14 June 2023.
  3. "International Day of University Sport". European University Sports Association. Retrieved 14 June 2023.
  4. "International Day of University Sport". UNESCO. Retrieved 14 June 2023.