பன்னாட்டு புவிஅறிவியல் மற்றும் புவிப்பூங்காக்கள் திட்டம்

அமைப்பு

பன்னாட்டு புவிஅறிவியல் மற்றும் புவிப்பூங்காக்கள் திட்டம் (International Geoscience and Geoparks Programme) என்பது யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்) மற்றும் புவியியல் அறிவியல் சங்கத்தின் பன்னாட்டு ஒன்றியத்தின் கூட்டு நிகழ்வு ஆகும்.

பன்னாட்டு புவிஅறிவியல் மற்றும் புவிப்பூங்காக்கள் திட்டம்
International Geoscience and Geoparks Programme
சுருக்கம்IGCP
உருவாக்கம்1972
வகைபன்னாட்டு அரசு சாரா நிறுவனம்
சேவை பகுதி
உலகம் முழுமையும்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரஞ்ச்
தாய் அமைப்பு
பன்னாட்டு புவி அறிவியல் ஒன்றியம்
வலைத்தளம்https://www.unesco.org/en/iggp

இது 1972ஆம் ஆண்டு பன்னாட்டு புவியியல் கூட்டுறவு திட்டம் (International Geological Correlation Programme) என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பன்னாட்டு புவியியல் கூட்டுறவு திட்டம் என்ற பெயரின் ஆங்கிலச் சுருக்கமான IGCP என்பது தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் பின்னர் பன்னாட்டுப் புவிஅறிவியல் திட்டம் என்று அறியப்பட்டது. புவிபூங்காக்கள் இத்திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டதால், நவம்பர் 2015ஆம் ஆண்டில் பன்னாட்டு புவிஅறிவியல் மற்றும் புவிபூங்காக்கள் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எல்லைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து பூகோளவியலாளர்களிடையே கூட்டு ஆய்வுப்பணி, ஆய்வுகள் குறித்த கூட்டங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் ஆராய்ச்சி ஒத்துழைப்பிற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். தற்பொழுது பன்னாட்டு புவிஅறிவியல் மற்றும் புவிபூங்காக்கள் திட்டத்தில் சுமார் 167 நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் மூலம் சுமார் 400 செயற்திட்டங்கள் செயல்பட்டில் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  • UNESCO. "International Geoscience Programme". Retrieved December 12, 2010.