பன்னாட்டு பெண் நீதிபதிகள் நாள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு மாதம் 10 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

பன்னாட்டு பெண் நீதிபதிகள் நாள் (International Day of Women Judges) ஒவ்வோர் ஆண்டும் மார்ச்சு மாதம் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.[1] உலகளாவிய பெண் நீதிபதிகளின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது இக் கொண்டாட்டத்தின் நோக்கமாகும். பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகவும், பாலினம் தொடர்பான நீதித்துறை ஒருமைப்பாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும்,[2] பெண்களின் பிரதிநிதித்துவப் பிரச்சினைகளை நீதித்துறை அமைப்புகளில் இணைப்பதையும் பன்னாட்டு பெண் நீதிபதிகள் நாள் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.[3]

சமத்துவத்தையும் சனநாயகத்தையும் அடைய முடிவெடுக்கும் அனைத்து நிலைகளிலும் பெண்களின் செயலூக்கமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை உறுதிப்படுத்தி உலகெங்கிலும் உள்ள பெண் நீதிபதிகளின் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது. பெண் நீதிபதிகளின் பன்னாட்டு நாள் நீதிபதிகள் மற்றும் சமூகத்தின் தலைவர்களாக மாற விரும்பும் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

பின்னணி தொகு

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாளன்று[4] ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒருமித்த தீர்மானத்தின் மூலம் இந்நாளை அறிவித்தது.[5] 2022 ஆம் ஆண்டு மார்ச்சு 10 ஆம் தேதியன்று உலகளவில் முதல் முறையாக பன்னாட்டு பெண் நீதிபதிகள் நாள் அனுசரிக்கப்பட்டது.[6][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. Layson, Sally (2022-03-02). "International Day of Women Judges". Rule of Law Education Centre (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  2. "International Day of Women Judges". www.unodc.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  3. "UNODC marks first International Day of Women Judges with call to promote women in the criminal justice sector as agents of change". United Nations : Office on Drugs and Crime (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  4. "International Day of Women Judges - Celebrating the Progress Towards Parity". African Women in Law (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  5. "International Day of Women Judges : All you need to know about history and significance". Firstpost (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  6. "IWD22: The International Day of Women Judges". www.barcouncil.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  7. "International Day of Women Judges Resolution". IAWJ 2021 (in ஆங்கிலம்). Archived from the original on 2022-07-26. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
  8. Mahapatra, Dhananjay (March 10, 2022). "SC to celebrate international day of women judges". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.