பன்னாட்டு மாவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம்

பன்னாட்டு மாவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (International Starch Institute) என்பது டென்மார்க்கில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமாகும். இது டென்மார்க் பல்கலைக் கழக வளாகத்தில், ஆர்ஹஸ்டேனிஷ் மாவுச்சத்து தொழிற்சாலையின் அருகில் அமைந்துள்ளது.[1] டென்மார்க்கின் சுற்றுச் சூழலியல் துறையுடன் இணைந்து இந்நிறுவனம் வாழைப்பழச் சாற்றினை மறுசுழற்சி செய்யும் ஆய்வை மேற்கொண்டது. அவ்வாய்வின் விளைவாக, பழச்சாறு செயற்கை உரமாகப் பயன்படக் கூடியதென்பது அறியப்பட்டது.[1]

பன்னாட்டுச் சந்தையில் வாழை மாவுப்பொருள் அறிமுகமானது. உணவுப் பதப்படுத்துதலில் ஒட்டுவிப்பானாகவும், தன்மைப்படுத்துவானாகவும் செயல்படுகிறது.

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 "நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்". agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.

வெளியிணைப்புகள்

தொகு