பன்மொழிச் சமூகம்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் முதன்மையாக மக்களின் பயன்பாட்டிலும் ஆட்சியியலிலும் இருக்கும் சமூகம் பன்மொழிச் சமூகம் எனப்படும். உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் சமூகங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. இத்தகைய சமூகங்கள், இந்தியா, இலங்கை, கனடா, ஆப்பிரிக்க நாடுகள், தென்னமேரிக்க நாடுகள், சிங்கப்பூர் மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் இருப்பதைக் காணலாம். இன்றைய உலகமயமாதல் காலகட்டத்தில் பன்மொழிச் சமூகக் கட்டமைப்பைப் பெரும்பான்மையான நாடுகளில் முன்னிலைப் படுத்திப் பேணுவது சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு இன்றியமையாத தேவையாகிறது.

இந்தியா

தொகு

இந்தியாவின் பல மாநிலங்கள் பன்மொழிச் சமூகங்களைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அவரவர் தாய்மொழியைத் தவிர பிறிதொரு மொழி (ஆங்கிலம், இந்தி முதலியவற்றில் ஒன்று) அம்மாநிலத்தின் அன்றாடப் பணிகளிலும் ஆட்சியியல் நடைமுறைகளிலும் நீதித் துறை அலுவல்களிலும் கல்வித் துறைப் பாடங்கள் மற்றும் ஆட்வுகளிலும் பரவலாகப் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்மொழிச்_சமூகம்&oldid=2922055" இலிருந்து மீள்விக்கப்பட்டது