பப்பு கலானி
சுரேஷ் புதர்மால் கலானி என்ற பப்பு கலானி (பிறப்பு:ஏறத்தாழ 1951) [1]மகாராட்டிரம் மாநிலத்தில் தானே மாவட்டத்தில் உள்ள உல்காசு நகர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1980 கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[2]
பப்பு கலானி | |
---|---|
பிறப்பு | 1951 |
பணி | அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | ஜோதி |
பிள்ளைகள் | 3 |
கலானி மீதுள்ள 19 குற்ற வழக்குகளில் (எட்டு கொலை வழக்குகள்) தற்போது பிணை பெற்றுள்ளார்.[3]1986ல் பப்பு கலானி உல்லாஸ்நகர் நகராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக உல்லாஸ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1992-2001 காலத்தில் கொலை வழக்கில் சிறையில் இருந்து கொண்டே இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டில் இந்தியக் குடியரசுக் கட்சி சார்பால் இவர் உல்லாஸ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pappu Kalani was only 35 years old when he was elected president of the Ulhasnagar municipal council in 1986."
- ↑ Girish Kuber (2007-01-09). "Pappu's Ulhasnagar gambit may backfire". The Economic Times. http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/Pappus_Ulhasnagar_gambit_may_backfire/articleshow/msid-1102026,curpg-2.cms. பார்த்த நாள்: 2007-05-24. "Suresh "Pappu" Kalani: a man who is seen as the personification of this lawlessness in (Ulhasnagar)"
- ↑ Dionne Bunsha (2004-12-17). "The States: Dons in a new role". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070310185007/http://www.hinduonnet.com/fline/fl2125/stories/20041217001704400.htm. பார்த்த நாள்: 2007-05-24.