பயணக் காசோலை
பயணக் காசோலை என்பது ஓரிடத்திலிருந்து பணத்தைக் கையில் கொண்டு செல்லாமல், தன்னிடமுள்ள பணத்தை ஒரு வங்கியில் செலுத்தி விட்டு, தேவையான போது, அந்த வங்கியின் பிற கிளைகளில் அல்லது அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள வழங்கப்படும் காசோலைகளைக் குறிக்கிறது. இக்காசோலைகளை சுழலும் காசோலை என்றும் அழைப்பதுண்டு. இவ்வகைக் காசோலையைப் பொதுவாக பயணம் மேற்கொள்பவர்களே பயன்படுத்துகின்றனர்.
பண்புகள்.
தொகு- இக்காசோலை கைமாற்ற முடியாதது.
- இக்காசோலையைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது பணத்தைப் பெற்றுக் கொள்ளவோ நடைமுறைக் கணக்கு அவசியமில்லை.
- இக்காசோலைகள் அதிக அளவாக பயணத்தின் போது மட்டுமே பயன்படுத்தப்படும்.
- இக்காசோலைக்கான பணம் பெற சமர்ப்பிக்கப்படும் போது உரிமை நிரூபிக்கப்பட வேண்டும்.
- செலாவணிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.