பயனர்:ஆராதனா ஸ்ரீ/மணல்தொட்டி
’’’மாடித் தோட்டம்’’’
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது |
மாடித் தோட்டம் என்பது மாடி வீடுகளில் காலியாக காணப்படும் மாடி திறந்த வெளியை பயனுள்ள வகையில் தோட்டம் அமைத்து பயன்படுத்துவதாகும். இதனை பெரும்பாலும் மாடி வீடு உள்ளவர்கள் திட்டமிட்டு பயன்படுத்த முடியும்.
மாடி அமைப்பு
தொகுதற்போதைய காலகட்டத்தில் பகுதி நேரமாக பலரும் இதனை செய்ய முனைந்துள்ளனர். மாடியில் நீர் புகா வண்ணம் சந்தையில் கிடைக்கும் நீர் புகா பூச்சு (WATER PROOF PAINTS) பூச வேண்டும். பின்னர் தங்களுக்கு ஏற்ற வகையில் மாடியில் தொட்டிகளாகவோ, நெகிழி பைகளாகவோ, கோணிப்பை அல்லது சாக்கு பைகள் கொண்டு அமைக்கலாம். இதில் இரண்டு வகையான விவசாய முறைகள் பயன்படுத்தப்படுகிறது.
வகைகள்
தொகு# செயற்கை முறை விவசாயம் # இயற்கை முறை விவசாயம்
இவற்றில் இயற்கை முறை விவசாயம் சிறந்தது.
பைகள் அமைக்கும் விதம்
தொகுதேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில்சாலைகளில், தேங்காய் நாரில் இருந்து பவுடர் போல உதிர்ந்து விழும் Saw Dust போன்ற பொருள் தான் இந்த Coir Pith. நாம் ஒரு தேங்காய் மட்டையை எடுத்து லேசாய் உதிர்த்து பார்த்தாலே தூசி போல கொட்டும்.இந்த துகள்களுடன், வேப்பம் பிண்ணாக்கு, மண் புழு உரம் மற்றும் கொஞ்சம் செம்மண் கலந்து தயார் செய்ய வேண்டும்.அடுத்தது செடி வைக்கும் தொட்டி.. மாடி தோட்டத்திற்கு என்று நிறைய வகைகளில் Grow Bags கிடைக்கிறது. நம்மிடம் இருக்கும் பழைய பிளாஸ்டிக் பக்கெட், பெயின்ட் டப்பா இருந்தாலும் பயன்படுத்தலாம். Grow Bags பயன்படுத்தும் போது முதலில் சில தேங்காய் மட்டைகளை ஒரு அடுக்கில் போட்டுவிட்டு பிறகு coir pith கலவையை கொட்டவும். இது நல்ல ஒரு அஸ்திவாரமாய் இருக்கும். கலவையை மேலே வரை கொட்டி விட்டு விதை போட வேண்டியது தான். கீரை விதை என்றால் மேல் அடுக்கில் லேசாய் தூவி, அதன் மேல் இன்னும் ஒரு அடுக்கு கலவையை தூவி விட்டால் போதும். மாடி தோட்டம் பொதுவாய் Shade Net வைத்து ஒரு பசுமை குடில் போல (Green House) அமைத்து உருவாக்கப்படுகிறது. ரொம்ப உயரம் (இரண்டாவது மாடியும் அதற்கு மேலும்) போகும் போது வெயிலின் தாக்கமும், காற்றின் வேகமும் அதிகமாய் இருக்கும் போது கட்டாயம் இந்த பசுமை குடில் அமைப்பது தேவை.