பயனர்:இயல்பாய் இரு/மணல்தொட்டி

                                        அழிவின் விளிம்பிலுள்ள சிட்டுக்குருவிகள்

இந்த பூமி யாருடையது ? மனித இனமின்றி, நம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ முடியும். ஆனால் மனிதர்கள் உயிர்வாழ நம்மை சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களும், இயற்கை அமைப்புகளும் தேவை. ஒரு உயிரினத்தின் அழிவு உணவுச்சங்கிலியில் கண்டிப்பாக மனித இனத்தை பாதிக்கும். இக்கருத்தை மனதில்கொண்டு நமது புதிய கண்டுபிடிப்புகளும், மனித நாகரிக வளர்ச்சியும் அமையப்பெறுதல் வேண்டும்.

கடந்த சில வருடங்களாக மனித வசிப்பிடங்களில் வாழ்ந்துவந்த சிட்டுக்குருவிகளின் இனம் மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இதற்கு காரணம்,
  • சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு,கேழ்வரகு,சோளம்,திணை,சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது.
  • கூரை வீடுகள்,ஓட்டு வீடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது ( இவையே சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் )
  • பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் பூச்சிகளும்,புழுக்களும் சிட்டுக்குருவிகளுக்கு உணவாக கிடைப்பதில்லை.