பயனர்:இரா. சுவாமிநாதன்/மணல்தொட்டி
தீஞ்சாலி சபதம்
இரா. சுவாமிநாதன்
காதலைப் பற்றி நானறிவேன் – பல கதைகளிலும் திரைப்படங்களிலும் பிறர்தரும் அனுபவம் வேண்டேன் – நான் புகுவேன் காதல் உலகில்.
செழித்து வளர்ந்த எனக்கு – ஒரு சிறுத்த குட்டைத் தோழி அழைத்தேன் துணையாய்க் கொள்ள – கடற் கரைக்குத் தினமும் செல்ல.
கதிரவன் மறையும் வேளை – அண்ணல் காந்தியின் சிலைப்பக்கம் போவோம் நதிக்கரைச் சோலையைப் போல – அங்கு நிறைந்திடும் மக்கள் வெள்ளம்.
கூட்டத்தில் புகுந்து போவோம் –எமை காண்போர் யாரென்று பார்ப்போம் நோக்கத்தைக் காட்டி விட்டால் – சிலர் நாய்போல் வருவர் பின்னே.
அங்கும் இங்கும் நடப்போம் – அவரை அலையவிட்டுப் பார்ப்போம் பொங்கிடும் மகிழ்வில் மனமும் – அவர் பின்னே வருவதைக் கண்டால்.
“எத்தனை பேர்உந்தன் தேவை” – என் தோழிதான் எனைக் கேட்டாள் “அதுபற்றி உனக்கேன் கவலை – அதிகம் பேசாதே” என்றேன்.”
“எனக்கொரு அய்யம் உண்டு – அதை உரைப்பேன் இப்போது கேட்ப்பாய் உனக்கொரு காதலன் வேண்டும் – அதற்கு இத்தனை பேர்ஏன் நம்பின்னே.”
“சும்மா கிடடி குள்ளி – மறை ஞானியைப் போல் பேசாதே இம்மாம் பெரிய் உலகில் –காதல் எல்லையைக் கண்டவள் நீயோ?
புதுமைக் காதல் செய்ய – நான் எடுத்தேன் எனக்குள் சபதம் எதிர்வரும் தொல்லைக்கு அஞ்சேன் – அவனி எதிர்த்தாலும் நிலை மாறேன்.
பலபேர் வருவர் என்பின்னே - நான் பொறுக்கி மூவரை எடுப்பேன் இளைமை துள்ளும் எனக்கு – அந்த மூவரும் காதலர் ஆவர்.”
“புதுமை யானதுன் கூற்று – உலகு பழித்திடு மேயடி பெண்ணே எதற்கும் துணிந்து விட்டாயே – உன் எண்ணம் என்ன சொல்லேன்.”
“அந்த மூவரும் என்சொந்தம் – நான் காதலைத் தோடர்ந்திடும் வரைக்கும் அந்த மூவரும் வரணும் – நான் செல்லும் பக்கம் எல்லாம்.
ஒளிவு மறைவு இல்லை – நான் எவர்க்கும் துரோகம் செய்யேன் களித்திட வேண்டும் வாழ்க்கை – அதற்கு காளையர் மூவரை எடுப்பேன்.”
தேர்வு முடிந்துது நன்றாய் – தேர்ந்த மூவரும் கல்லூரி மாணவர் இருவர் குட்டையர் ஆவர் – அதில் ஒருவன் மட்டும் நெட்டை.
“புவியீர்ப்பு போலொரு சக்தி – என் பார்வையில் உள்ளது போலும் தவித்திடும் ஆவல் பொங்க – எனைத் தொடர்ந்து பின்வரு கின்றார்.”
குட்டைத் தோழியின் வேலை – காதல் மொழிகளைக் கேட்ப்பது மட்டும் தன்வாய் திறந்து எதையும் – அவள் சொல்ல உரிமை இல்லை.
காதலர் மூவரும் ஒருநாள் – சின்னக் கேள்வி ஒன்றைத் தொடுத்தனர் “காதலி ஒருத்தி நீதான் – ஆனால் காதலர் மூவர் உள்ளோம்
புதுமை நம்காதல் ஆகும் – புதிய பாஞ்சாலி நீயாகி விட்டாய் புதுமையை வெறுக்கும் இவ்வுலகு – உனைப் பழித்திடக் கூடுமே யன்றோ ?”
”பாஞ்சாலி சுமந்தது ஐவர் – நான் பிடித்தது மூவர் மட்டுமே பாஞ்சாலி என்பதைக் காட்டிலும் – எனைத் தீஞ்சாலி என்பதே பொருந்தும்.
ஒருஆண் பலபேரை மணக்கலாம் – மனம் ஒவ்வாது போனால் கழிக்கலாம் ஒருபெண் அதையே செய்தால் – ஏன் ஆடவர் கூக்குரல் இடுவார்?
மணமல்ல இங்கு விஷயம் – இன்பக் காதல் தானென் விருப்பம் குணமுள்ள பெண்ணொருத்தி ஏனோ – ஒரு காதலன் போதும் என்பாள்.
பழமைக் காதல் அதுவே – நான் புதுமை செய்யவே புகுந்தேன் பழமாய் நான்ஆன பின்னே – இளம் கிளிகள் உம்பணி என்ன?”
”மன்னித் தருள வேண்டுகிறோம் – இனி மடத்தனமாக யாம் பேசோம் இன்று கடிதங்கள் பெறவில்லையே – யாம் இதோ இப்போது தருகின்றோம்.”
“நல்லது இனிய் நண்பர்களே – என் நெஞ்சில் நீங்கா இடம்கொண்டீர் காதலில் முதல்நிலை கடிதங்களே – அதில் கண்டோம் வெற்றி அமர்க்களமாய்.
அடுத்த நிலையைப் பற்றித்தான் – நான் அல்லும் பகலும் யோசிக்கிறேன் கிடைத்த இடத்தை நாமெடுத்தால் – காதல் கொடுக்கும்ம் இன்பம் குறைந்திடுமே!
கடற்கரை நமக்கினி உதவாது – நாம் கண்டிட வேண்டும் வேறுஇடம் இடம்மொன்று சொல்வீர் இப்போழுதே – நாம் நாளை முதல்அங்கு சந்திப்போம்.”
“ஆளுஞர் மாளிகை முன்பூங்கா – ஒன்று இருப்பதை நீதான் அறியாயோ ஆள்நட மாட்டமும் குறைவங்கே – யாம் எதிர்பார்த் திருப்போம் உனையங்கே.”
முகவரி: 15, 23வது குறுக்கு வீதி, அவ்வை நகர், புதுச்சேரி – 605 008. குறிப்பு: 1982ஆம் ஆண்டு நடைப்பயிற்சிக்காக ஒரு நண்பருடன் நாள்தோறும் மாலைவேளையில் புதுவைக் கடற்கரைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது தினமும் ஒரு உயரமான இளம்பெண் தனது உயரத்தில் பாதி உயரம் உள்ள தனது தோழியுடன் புதுவைக் கடற்கரையின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை தினமும் நடைப்பயிற்சி கொள்வது வழக்கம். சில நாட்கள் கழித்து அவர்களுடன் மூன்று இளைஞர்களும் அந்தத் தோழியருடன் நெருக்கமான நடைப்பயிற்சியோடு அரட்டையிலும் திளைத்தனர். அதன் விளைவே இந்தக் கவிதை.