பயனர்:உலகன் மக்கட்டி./மணல்தொட்டி

                தீ அவசரம் !

படி இளைஞனே படி ! பற்றிக்கொள்ள படி ! பற்றவைப்பதை படி !

எப்போதும் தண்ணீருக்குத்தான் தடுப்புச்சுவர் வேண்டும் . ஈரமற்ற விறகிற்கு இடைத்தரகர் தேவையில்லை !

எனவே , தீ வருவதற்கு வேண்டியும் திறந்துவைத்திரு வாசலை .

பற்றிக்கொண்டபின்னும் தீ விளம்பப்படி ! பச்சையை சுடவும் , பரிட்சைக்கு தரவும் பதமான தீயை பகுத்தறிந்து படி !

உன்மத்தம் சுட்டு உன் மதத்தையும் சுடுவதற்கான உயர்ந்த தீயை ஊன்றிப்படி !

ஆனாலும் .., உள்ளிருக்கும் நெருப்பே புவியியக்கத்துடனானது .. வெளியே எரிவதெல்லாம் விளிமயக்கம் கலந்ததே !

பரவாயில்லை .. பீடித்தீயிடம் நுரையீரலை கொடு , ஊதுபத்தித்தீயிடம் உள்ளத்தை கொடு , பருவத்தீயிடம் பாவையை கொடு , ஆனால் ., அறிவு தீ இன்னும் தீ கேட்கும் .. அப்போது அடுப்புத்தீயெடுத்து அறிவை அளவெடுக்காதே ! நல்ல தீ பார்த்து நலுங்கு நடத்து !

நெருப்பை கண்களில் நிறைத்துக்கொண்டும் விழித்திருக்க சூரியனை படி !

நெருப்பை மடியில் கட்டிக்கொண்டும் உறங்குவதற்கு கற்களை படி !

உயிருள்ள விதைகளையும் உயிரற்ற சதைகளையும் இருவேறு தீக்கொண்டு எதிர்படுகிற மண்ணின் நெருப்பை மனப்பாடம் செய் !

ஆனாலும் .,நினைவிருக்கட்டும் .. எப்போதும் தொலைப்பதுதான் அறிவுத்தீயின் பொறுப்பு ,- தொலைந்து போவதற்கில்லை !