பயனர்:எஸ்.உமாபதி/மணல்தொட்டி

சிவகிரி புலிப்பாணிச் சித்தர் பீடம்:

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் புலிப்பாணிச் சித்தர் பீடம் உள்ளது. இங்கு புலிப்பாணிச் சித்தர் சிலை தெற்கு நோக்கியும் அதற்கு நேர் எதிரே விநாயகர் சிலை வடக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அமைவிடம்: ஈரோட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளகோவில் செல்லும் சாலையில் சிவகிரி உள்ளது. சிறப்புத் தகவல்கள்: இங்கு வாராவாரம் செவ்வாய்க்கிழமை மாலை பூஜையும் கூட்டு வழிபாடும் நடைபெறுகின்றன. பெளர்ணமி தோறும் சிறப்புப் பூஜைகளும் சிவாகம முறைப்படி நடத்தப்படுகின்றன. இத்தலம் தனியாருக்குச் சொந்தமானது. இக்கோவில் பராமரிப்பு தனிநபரால் மேற்கொள்ளப்படுகிறது.