பயனர்:ஐயன்/மணல்தொட்டி
பதிப்பகங்கள் குறித்த அவதானிப்பும் என் பார்வையில் அறம் பதிப்பகமும்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பதிப்பகங்கள் பதிப்பு தர்மத்தின் படி செயல்பட்டு வருகின்றன.
அப்படி செயல்பட்டு வருவதில், அறமற்ற வழியில் இயங்கி வருகிற பதிப்பகங்களின் பின்னால் ஒரு அரசியல் மறைந்து இருக்கிறது.
ஏதோவென்றின் அதிகார அரசியலைப் பற்றிக்கொண்டு தான் பெரும்பாலும் அறத்தை மறுதலித்துவிட்டு அவைகள் இயங்குகின்றன.
அப்படி இயங்குகிற பதிப்பகங்கள் அனைத்தும் அறத்தை முன்னிறுத்தி தான் 100% செயல்படுகிறது என்று சொல்ல முடியாத அளவிற்கு,
இன்றைக்கு அநேகப் பதிப்பகங்களின் செல்நெறிகளும் அதன் சமகாலப் போக்குகளும் ஜனநாயாக மற்ற/சமத்துவத் தன்மையற்ற பிற்போக்குகளின் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன.
ஜனநாயகத் தன்மையோடு இயங்குவதாகக் காட்டிக் கொள்ளும் பதிப்பகங்களின் நோக்கங்களில் சமகாலமாக வணிக மற்றும் இலாப நோக்கு தலைத்தூக்கி வருவதையும் உணர முடிகின்றது.
வணிக மற்றும் இலாப நோக்கில் செயல்படுகிற அரசியல்/அதிகாரம் கொண்ட பதிப்பகங்கள்,
எந்தவிதமானப் பக்கப் பலமுமற்ற சிறு பதிப்பகங்களை ஒடுக்குவதும், தொடக்க நிலையிலேயே தலையெடுக்க விடாமல் செய்வதும் கூட நிகழத்தான் செய்கின்றன.
ஆனால், எல்லாவிதமானச் சவால்களையும்,நெருக்கடிகளையும்,ஒடுக்குதல்களையும் தாண்டி அறம் பேணுகிற பதிப்பகங்களை அறமே முன்னின்று வழி நடத்தி தற்காத்து வெற்றி பெற செய்துவிடுகிற நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கின்றன.
இந்த வகையில் நல்லது நிகழும் பதிப்பக உலகில் அல்லதுகளாக
எத்தனையோ குதர்க்கங்களும், குளறுபடிகளும்,
அரசியல், அதிகார துஷ்பிரயோகங்களும்,
பல்வேறுபட்ட புறக்கணிப்புகளும்
முகம் சுளிக்கிற நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியை மையமாகக் கொண்டு செயல்படுகிற *அறம் பதிப்பகம்* இப்படி எத்தனையோ சொல்லமுடியாதப் புறக்கணிப்புகளையும், இருட்டடிப்புகளையும் தாண்டி,
பெயரில் கொண்டுள்ள அறத்தின் வழி நின்று தொடர்ந்து முற்போக்கு சிந்தனையுடன் பதிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது.
அடித்தள-விளிம்புநிலை எழுத்துகளை கூர்மைப்படுத்தும் இந்தப் பதிப்பகத்தின் அறச் செயல்பாடுகள் அனைத்தும்,
1)சமுக மேம்பாட்டிற்கானது. 2)சூழலில் அக்கறை கொண்டது, 3)தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, 4)இயற்கை வள அரசியல் நோக்குடையது 5)பெளத்த மார்க்கத்தை சரியானப் பார்வையில் மறு கட்டமைப்பது. 6)தமிழ் இலக்கியங்களை பல்வேறு ஆய்வு நோக்கிலும் மறு வாசிப்பு செய்வது.
என்பன போன்ற தடங்களில் மனித குலத்திற்கு ஆக்கம் விளைவிக்கின்ற எழுத்துக்களைப் பெரிதும் இலாப நோக்கமின்றி படைப்புகளாக நியாயம் தவறாமல்/நெறி தவறாமல் மாற்றுவது மட்டுமே.
கருத்தியல் தளத்தில் வினையாற்றுகிற இந்த அறம் பதிப்பகம் எந்தவிதமான சமரசமும் இன்றி, ஜனநாயக மற்றும் சமத்துவப் பார்வையின் கீழ் எல்லாவிதமானப் படைப்பாளிகளின் படைப்புகளையும் நியாயமானக் கட்டணத்தில் பிரசுரிக்க திறந்த மனதோடு இயங்கி வருகின்றது.
எளிய படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை,இந்த அறம் பதிப்பகத்தின் செயல்பாடுகளுக்கு உட்பட்டு மிக குறைவான அதிலும் நியாயமான கட்டணத்தில் பதிப்பித்துக் கொள்ளலாம்.
இந்தப் பதிப்பகத்தின் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது என்றாலும் கூட, அது மற்ற பதிப்பகங்கள் போன்று அதிகார அரசியல் பிற்போக்கு முகத்தை மறைத்து,
தன்னை மட்டும் முன்னிறுத்தி,மற்றவற்றை ஒடுக்கிற கோரக் குணமுடையதாக நிச்சயம் இல்லை.
சமூகத்தின் மேம்பாட்டிற்காக எழுதப்படுகிற படைப்புகள் அனைத்திற்கும் *அறம் பதிப்பகம்* நல்ல வடிகாலாக நிச்சயம் இருக்கும்.
நியாயமான கட்டணத்தில் பதிப்பு பணி ஆற்றுகிறார் அறம் பதிப்பத்தை எளிய எழுத்துப் படைப்பாளர்கள் யாவரும் நிச்சயம் அனுகலாம்.
அறம் பதிப்பகத்திலிருந்து தற்போது அறம் பன்னாட்டுத் தமிழ்ப் பல்சுவை மாத இதழ் ஒன்று வெளிவந்து கொண்டிருக்கிறது.
அறிமுக எழுத்தாளர்களா நீங்கள் எனில், உங்கள் படைப்புகளை பிரசுரிக்க மற்றும் நியாயமான கட்டணத்தில் நூல் படைப்புகளாக மாற்ற நீங்கள் தயக்கமின்றி அனுகலாம்.
தொடர்பிற்கு.. arampublication50@gmail.com மா.அமரேசன் அறம் பதிப்பகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர்.