பயனர்:கணேசன் பெருமாள்/மணல்தொட்டி

அருள்மிகு வையாளிமுத்து (வையாழிமுத்து) இருளப்பசாமி திருக்கோவில் ஆனது அமைவிடம், திருவில்லிபுத்தூர் நகரில் இருந்து சுமார் 5 கி.மீ தென்கிழக்கே கழுகுமலை போகும் பாதையில் அத்திகுளம் கிராமம் அருகே அமைந்துள்ளது. .

அருள்மிகு வையாளிமுத்து அருள்மிகு இருளப்பசாமி திருக்கோவில் ஆனது விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே நகரில் இருந்து தென்கிழக்கே திருவில்லிபுத்தூர்-கழுகுமலை வடமேற்கில் இருந்து தென்கிழக்காக போகும் சாலையில் பெரிய அத்திகுளம் கிராமத்திற்கு அருகே சுமார் 1 கி. மீ தொலைவில் உள்ளது. இக்கோவில் கிழக்கு நோக்கி அழகிய வயல்வெளிகளுக்கு நடுவே வேப்பமரங்களை குடையாக கொண்டு அமைய பெற்றிருக்கும் கிராமிய திருக்கோவிலாகும். திருக்கோவில் திருவிழா வைகாசி மாசம் நடைபெறுகிறது, ஓராண்டு இடைவெளியில் ஒவ்வொரு வைகாசி மாதமும் இதர நாட்களின் வருடம் முழுவதும் முக்கிய தினங்களில் வழிபாடு நடைபெறுகிறது. விழாவின் போது கிராமிய வில்லுப்பாட்டு மூலம் சாமியின் வரலாறு பாடப்படுகிறது.

வழிபடும் மக்கள்:

தென்தமிழ் நாட்டு உழவுக்குடி மக்களால் விரும்பி வணங்கப்படும் குலசாமி தெய்வங்கள் ஆகும். இக்கோவிலுக்கு திருப்பணிகள், விழாக்கள் வெகு விமரிசையாக மேற்கொள்வோர் சித்தாலம்புத்தூர், சின்ன அத்திகுளம், பெரிய அத்திகுளம், கீழப்பொட்டால்பட்டி உள்ளிட்ட கோவிலுக்கு அருகாமையில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் எனும் ஆதித் தொல்தமிழ் குடிகளான உழவுச் சமூகத்தினர் ஆவர். இவர்கள் முன்னோர்கள் வழிபட்ட தங்கள் குலசாமியை மறவாமல் இருக்க அதற்கு உதாரணமாக இவர்கள் தங்கள் குலசாமி வகையறாக்களுக்கு வையாளி, முத்து, லிங்கம், இருளப்பன், இருளப்பசாமி என்றும், பரவலாக தங்கள் சந்ததிகளுக்கு குலசாமியின் பெயரையோ அல்லது மாறிவிட்ட காலமாற்றம் கருதி புதுமையான பெயர் வைப்பினும் தங்கள் குலசாமிகளான வையாளிமுத்து இருளப்பசாமி தெய்வங்களின் பெயரின் முதல் எழுத்திலேயே பிறக்கும் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுகின்றனர்.

திருக்கோவில் தொன்மையும், வரலாறும்:

இக்கோவிலுக்கு திருப்பணிகள், விழாக்கள் வெகு விமரிசையாக மேற்கொள்வோர் சித்தாலம்புத்தூர், சின்ன அத்திகுளம், பெரிய அத்திகுளம், கீழப்பொட்டால்பட்டி உள்ளிட்ட கோவிலுக்கு அருகாமையில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் எனும் ஆதித் தொல்தமிழ் குடிகளான உழவுச் சமூகத்தினர் ஆவர்.

இக்கோவில் பற்றி இச்சமூகத்தினரின் முன்னோர்கள் பழம்பெரும் வரலாற்று கதைகளை கூறுகின்றனர். பெரும்பாலும் இந்த சமூகத்தினர் தாங்கள் சிவன் வழி வந்த பாண்டியர் மரபினர் என்றும் அந்த சிவனையே குலசாமியாக கொண்டு வணங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

இறைவனது திருப்பெயருக்கு பின்வரும் விளக்கம், வையம்+ஆளும்+முத்து = வையத்தை ஆள்கின்ற முத்து (லிங்கம்) அதுவே மறுவி பின்னாளில் வையாளிமுத்து என்றும், கிராமிய வழிபாட்டு குறியீட்டில் அது சிவன் தான் என்கின்றனர் (முத்து என்றால் சிவம் என்கின்றனர்), இருளப்பசாமி என்றால் இருளை போக்க வந்த சாமி, மனித வாழ்வில் ஏற்படும் காரிருளை அடக்கி, இருளை வென்று பக்தர்களுக்கு ஒளியாக முக்தி அருளும் சாமி இருளப்பசாமி என்றும் வழி வழியாக வந்த முன்னோர்கள் கூறி சென்றதாக தற்கால தலைமுறையினர் கூறுகின்றனர்.

ஒரு சாரார் வையாளிமுத்து இருளப்பசாமி இரண்டும் தெய்வங்களா இருக்க வாய்ப்பில்லை ஒரே தெய்வம் எனவும் நம்பலாம் என்கின்றனர், அதாவது ஒரு தெய்வம் இரண்டு திருப்பெயர்.

கணிசமானோர் இது மாமன்-மச்சான் குலசாமி எனவும் அதற்கு ஆதாரமாக பெருமாளை குறிப்பது வையாழிமுத்து எனவும் (உதாரணம் பெருமாள் கோவிலில் வையாளி சேவையில் அதாவது தங்ககுதிரையில் வலம் வரும் பெருமாள் எனவும், இருளப்பசாமிய குறிப்பது தான் சிவபெருமான் எனவும் கூறுகின்றனர், அதற்கு ஆதாரமாக சித்தாலம்புத்தூர் மற்றும் கீழபொட்டல்பட்டி கிராம ஊர்க்காரர்கள் மாமன்-மச்சான் உறவுமுறையினர் என்றும் கூறுகின்றனர்.

ஒரு சில பெரியோர் வையாளிமுத்து இருளப்பசாமி என்போர் பாண்டியர் படையின் தளபதிகளா இருந்திருப்பர், அவர்கள் குடி கொண்டுள்ள இந்த சன்னதியில் அவர்களை சுற்றிலும் 24 சேனை படைகள் (சான்று சரிபார்ப்பது அவசியம்) உள்ளன என்றும் இவர்கள் பாண்டிய நாட்டினை அந்நியரிடம் இருந்து காக்க வீரப்போரிட்டு காத்தவர்களா இருந்திருக்கலாம் அதனால் இவர்களை தொன்று தொட்டு பல தலைமுறையாக மக்கள் வணங்கி வந்திருக்கவும் வாய்ப்பு என்போரும் உண்டு.

திருக்கோவில் சிறப்பம்சம் :

வையாளிமுத்து இருளப்பசாமி திருக்கோவில் சந்நிதி கிழக்கு நோக்கி அழகிய பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்து அமைந்துள்ளது, சுற்றிலும் நெல், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவைகள் பயிரிடப்படுகின்றன. கிராமிய கோவிலாகவே இருப்பினும் இக்கோவிலின் பிரதான சன்னதியில் அசைவம் சார்ந்த படையல்கள மக்கள் படைப்பதில்லை, இக்கோவிலுடன் சார்ந்த மற்ற காவல் தெய்வம் அய்யனார் சன்னதி திருக்கோவிலுக்கு எதிராக கிழக்கு திசையில் 100 முதல் 200 அடி தூரத்தில் தோப்புக்குள் அமைந்துள்ளது, காவல் தெய்வம் அய்யனார் சாமிக்கு அசைவம் படையல் இடப்படுகிறது.

மேலும் சின்ன அத்திகுளம் கிராமத்தில் திருக்கோவிலின் பூசைப்பெட்டி, பட்டாடை, வெட்டருவாள், வேல்க்கம்பு, சூரிகத்தி உள்ளிட்டவை வைக்கப்படுள்ள பூசை அறை எனப்படும் சிறுகோவில் சன்னதியும் வசிக்கும் ஊருக்குள்ளயே வணங்கும் விதம் அமைந்துள்ளது.

திருக்கோவில் சன்னதியில் சுவையான நல்ல குடிநீர் மக்கள் பொங்கல் படையல் செய்யவும் குடிநீர் ஆகாரமாகவும் மின்னியற்றி நீர்வழங்கும் வசதியுடன் அமைக்க பெற்று உள்ளது.

திருக்கோவிலின் மேற்கே அழகிய வயல் தோப்பு அருகே தீர்த்தவாரி கிணறு உள்ளது. மேலும் முளைப்பாரி இடும் இடமாகவுமஉள்ளது.