பயனர்:காயத்திரி காயா/மணல்தொட்டி
செல்லையா யோகரத்தினம் (ஒகஸ்ட் 10 .1938 பணி ஒய்வு: 10. 08. 1988) திருக்குறளை ஆங்கிலத்தில் இலகுதமிழில் மொழி பெயர்த்த ஈழத்து பெண்மணியாக இவர் போற்றப்படுபவர் .அறிவகம்' மீசாலையை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கனடாவில் வாழ்கிறார் - இவர் தமிழன் வழிகாட்டி இயக்குனர் செந்தி செல்லையாவின் தாயார் ஆவார் .
பொருளடக்கம்
கல்வி கற்பித்த பாடசாலைகள் இலக்கிய பணி வாழ்க்கை குறிப்பு
- சாவகச்சேரி ,ந்துக்கல்லூரி,
யரழ்ப்பாணக்கல்லூரி வட்டுக்கோட்டை. ஆசிரியப்பயிற்சி: பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி (விசேட பயிற்சி ஆங்கிலம்) ஆசிரிய சேவை: மீசாலை விக்கினேசுவர வித்தியாலயம், யா/கச்சாய் அரசினர் பாடசாலை யா/வீரசிங்கம் மகா வித்தியாலயம், கி/பரந்தன் ,இந்துக் கல்லூரி, சாவகச்சேரி ,இந்துக்கல்லூரி,
இலக்கியப் பணி:
திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு 'ஆங்கிலத்தில் திருக்குறள்' ஊர பற்றிய நூல்;: மீசாலை பிறந்த மண்ணிற்பெற்ற சுகந்தம் பாகம் 3 மீசாலை
மேற்படிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
வெளிநிலைக் கல்வி: கனடா வளாகம் தமிழ்: இளங்கலை, முதுகலை
வாழ்க்கை குறிப்பு
தென்மராட்சி மீசாலையைச் சேர்ந்த முத்திமிழ் வித்தகர் மறைந்த திரு அ.பொ.செல்லையா ஆசிரியரின் துணைவியார் திருமதி செல்லையா யோகரத்தினம் அவர்கள்; தன் கணவனின் திருக்குறட் பணியைத் தொடர்ந்து தானும் அதே பாதையில் கால் பதித்துள்ளார். இவர் யாவரும் அறிந்துகொள்ளும் முறையில் தெரிந்து கொள்ளும் வகையில் திருக்குறளை புதிய முறையில் மொழிபெயர்த்துள்ளார்.
கனடா போன்ற பிற மொழிச் சூழலில் சிறியவர்களும் பெரியவர்களும் திருக்குறளைக் கற்க வேண்டும் அதன் வழி நிற்கவேண்டும் என்ற சீரிய சிந்தனையால் எழுந்த உயரிய நோக்கில் இவ்வுரையின் விளக்கப்பணி அமைந்துள்ளது. எனவே இந்நூலின் பெயர் 'ஆங்கிலத்தில் திருக்குறள்' என அமைந்துள்ளது
21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப செப்பமான சிந்தனையுடன் நாடு ,இன, மத, மொழி, வகுப்பு, குழு, ,இயக்க வேறுபாடின்றி தொகுக்கப்பட்டு ,இளைஞர்களும் பாமர மக்களும் யாருடைய உதவியுமின்றி புரியக்கூடிய, விரும்பிப் படிக்கக்கூடிய சிறந்த ஒரு உரையே எமக்குத் தற்பொழுது தேவை. வெறும் கல்விமான்கள் மாத்திரம் ஆய்வு செய்வதற்கல்ல திருக்குறள் என மற்றும் பாமர மக்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்ற தன் மொழி பெயர்ப்பின் நோக்கினை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் மொழியெர்ப்பு அமைப்பு, திருக்குறளின் மூலம் தொடக்கத்திலும் அதனைத் தொடர்ந்து ஆங்கில எழுத்துப் பெயர்ப்பிலும் அதனை அடுத்து ஆங்கில மொழிபெயர்ப்பும் தொடர்ந்து தமிழ் உரையும் உள்ளன. யாவரும் துணையின்றி பயின்று கொள்ளும் முறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருக்குறளின் பிற மொழிபெயர்ப்பு ஆசிரியர்களின் உரைகளுக்கு மாறுபட்டதாகவும் ,இவருடைய உரை அமைந்துள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
முதற் குறளில் 'ஆதிபகவன்' என்பதை 'சூரியனாகக்' குறிப்பிடுகிறார். பிற உரை ஆசிரியர்கள் தெய்வமாகக் குறிப்பிடுகின்றமை எண்ணிப்பார்க்கத் தக்கது. 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.'
.A is for all letters of languages the first letter likewise sun is for all lives. 'அகரம் மொழிகளின் எழுத்துக்களுக்கு எல்லாம் முதலாக ,ருப்பது போல சூரியன் உலகத்தின் வளர்ச்சிக்கெல்லாம் முதல்வனாக உள்ளான்.' என்று குறிப்பிடுகிறார். இதே போன்று வேறு வேறு இடங்களிலும் பகுத்திறிவுச் சிந்தனைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.'
A lady who does not follow any others as great and considers her husband as great and runs her family in harmony is like the rain which comes when you wish for it.
'பெரியோர் என்று வேறு யாரையும் பின்பற்றி நடக்காது கணவனையே மேலானவனாக எண்ணி அவனுக்கு அமைய குடும்பத்தை நடத்தும் பெண், பெய் என்று எண்ணியவுடன் பெய்யும் மழைக்கு ஒப்பானவள்.' என்று பெண்ணை மழைக்கு ஒப்பிடுகிறார். பிற மொழி பெயர்ப்பாளர்கள் 'மழை பெய்ய வேண்டும் என்று அப் பெண் கட்டளை இட்டதும் மழை பொய்க்காது பெய்யும்.' என்று கூறுகின்றனர்.
இங்கே தன்னை பகுத்தறிவாதியாக சிந்தனைச்சிற்பியாக, 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமாக ஆக்கிக் கொள்கிறார் ஆசிரியர் யோகரத்தினம் அம்மையார் அவர்கள்.
ஒவ்வொரு அதிகாரத்தின் ,றுதியிலும் அடிக்குறிப்பாக அதிகாரத்தில் கற்பதற்கு ,இலகுவான குறள், நடுத்தரமான குறள், கடினமான குறள் என்று வகுத்துக்காட்டி கற்பவருக்கு குறட்பாக்களை எளிமையிலிருந்து வலிமைக்குப் படிப்படியாக மன்னேறிப் படிக்கத் தூண்டுகிறார்.
நூலின் ,இறுதியில் மொழிபெயர்ப்பாளரின் வேறு துறை சார்ந்த ஆனால் குடும்ப நலம் சார்ந்த, திருக்குறள் ,இன்பத்துப்பால் ஒவ்வொரு அதிகாரத்தையும் தழுவிய கட்டுரைகளும் தமிழில் ,இணைக்கப்பட்டுள்ளமை சிறந்த குடும்ப அமைப்பிற்கு வழி காட்டுவதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்தினரும் படித்துப் பயன் பெறக்கூடியவை. பயன்பெற வேண்டியவை.
மேலும் ,இவருடைய மொழிபெயர்ப்புப்பணி ,இவருடைய கணவர் கனடாவின் Charter of Righs and Freedoms சை மொழிபெயர்ப்புச் செய்யும் போது இவர் உதவிய முறையிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தமை சிறந்து விளங்கியமை ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் உள்ளாள் என்பது தெளிவாக்கப்பட்டமை ,இங்கே சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியது.
இவர் ஒரு ஓய்வுபெற்ற விசேடபயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர். ஒரு பகுத்தறிவுவாதி, சிறந்த சிந்தனையாளர், சுயமரியாதையுடையவர். சொல்லாலும் செயலாலும் வாழ்ந்து காட்டுபவர்.
ஈழத்தில் பிறந்து காலத்தின் கொடுமையால் கனடா நாட்டில் குடியேறினாலும் தன் தமிழ்ப் பணியை, சமூகப்பணியை தன் கணவரின் பாதையில் நின்று தொய்வின்றி செய்துவருகிறார். திருக்குறளுடன் மாத்திரம் நின்றுவிடாது தான் பிறந்த மண்ணான 'மீசாலை' பற்றிய நூலினை ஆங்கிலத்திலும் தமிழிலும் தனித்தனியே அமைத்து வருகிறார்.