பயனர்:கா.ந. கல்யாணசுந்தரம்/மணல்தொட்டி

கா.ந.கல்யாணசுந்தரம் வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்ப்பணியாற்றி வருகிறார். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் இரண்டாயிரத்துக்கு மேல் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார். புதுக்கவிதை, நவீனம் மற்றும் மரபுக்கவிதைகளும் எழுதி வருகிறார். இவரது புதிய கவிதை வடிவக் கண்டுபிடிப்பான " தன்முனைக் கவிதைகள் " தெலுங்கு நானிலு வடிவத்தை தழுவியது. முனைவர் கோபி அவர்களின் தெலுங்கு வடிவ நானிலு கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் சாந்தா தத் அவர்களின் வடிவத்தை உள்வாங்கி கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு புதிய விதி முறைகளை வகுத்து தன்முனைக் கவிதைகள் எனப் பெயரிட்டு நான்கு வரிக்கவிதைகளை புதுப்பொலிவுடன் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். நாளேடுகள், மாத வார இதழ்கள், முகநூல் குழுமங்கள் இவ்வகை கவிதைகளை வெளியிட்டு வருகின்றன. போட்டிகளும் நடத்தி விருதுகளும் சான்றுகளும் கூட கவிஞர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்க வளர்ச்சி. 52 கவிஞர்களின் தன்முனைக்கவிதைகளை தொகுத்து " வானம் தொடும் வண்ணத்துப்பூச்சிகள் " எனும் நூலினை கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் கம்போடியா நகரில் அங்கோர் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் வெளியிட்டார். மிகுந்த வரவேற்பினைப் பெற்ற அங்கீகாரமானது இவரது கண்டுபிடிப்பான புதிய தமிழ் கவிதை வடிவம் தன்முனைக் கவிதைகள் என்பது வரலாற்றுப் பதிவு.

பிறப்பு மற்றும் படிப்பு

தொகு

கா.ந.கல்யாணசுந்தரம் என்பவர் தமிழகம் அறிந்த ஹைக்கூ கவிஞர். இவர் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள காவனூர் என்னும் சிறு கிராமத்தில் கர்ணம் மா.நாயனாப்பிள்ளை , பாலகுஜாம்பாள் தம்பதியினருக்கு எட்டாவது மகவாகப் பிறந்தவர். தமது பள்ளிப் படிப்பை அரசினர் உயர்நிலைப்பள்ளி காவனூரிலும் கல்லூரிப் படிப்பை வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியிலும் படித்தார். மதுரை காமராசர் பல்கலையில் பொருளாதாரம் முதுகலை பட்டம் பெற்ற இவர் முப்பத்து எட்டு ஆண்டு காலம் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 25 ஆண்டுகாலம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நிரந்தரமாக தனது வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இவர் தற்போது சென்னை மேடவாக்கத்தில் தமிழ் இலக்கிய பணி செய்து வசித்து வருகிறார்.


கவிதைப்பணி

தமது பள்ளிப் படிப்பு காலத்திலேயே மரபுக் கவிதைகள் மற்றும் இசைப் பாடல்கள் எழுதினர். இவரது பாடல்கள் பல சென்னை மற்றும் திருச்சி வானொலிகளில் மெல்லிசையாக ஒலிபரப்பு செய்யப்பட்டன. காவியப்பாவை, மலைச்சாரல், கலைமகள், குயில் போன்ற இலக்கிய பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்தன. பாவேந்தர் அடியொற்றி எழுதிய கவிதைகளுக்கான இவருக்கு 1991 ல் காஞ்சிபுரத்தில் பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் கவிஞர் மன்னர் மன்னன் " பாவேந்தர் பட்டயம் " வழங்கி சிறப்பித்தார். இவர் எட்டு ஆண்டுகள் செய்யாறு தாழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தினார். 1992 முதல் இவர் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் முனைப்புடன் ஈடுபட்டு 1999 ஆம் ஆண்டு " மனிதநேயத் துளிகள் " எனும் ஹைக்கூ தொகுப்பினை வெளியிட்டார். இத்தொகுப்பில் இவரது ஹைக்கூ கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டது சிறப்பு. இதுவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் இருமொழி ஹைக்கூ புத்தகமாகும். புத்தக வெளியீடு அன்று இவருக்கு " மனிதநேயக் கவிஞர் " எனும் விருதினையும் செய்யாறு தமிழ்ச் சங்கம் வழங்கி சிறப்பித்தது.

மேலும் இவரது சிறந்த ஹைக்கூ கவிதைகள் " மனசெல்லாம் " என்னும் இவரது நூலில் காணலாம். ஹைக்கூ கவிதைகளில் புதிய பரிணாமமாக இவரது மனிதநேயத்தை ஒட்டிய கவிதைகள் பலரின் பாராட்டுதல்களை பெற்றன. இவரது பல ஹைக்கூ கவிதைகள் மலையாளம், ஹிந்தி, பிரஞ்சு , ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வெளியானது குறிப்பிடாத தக்கது. இவரது அயராத ஹைக்கூ பணியால் " ஹைக்கூ சிகரம் " " ஹைக்கூ செம்மல் " போன்ற விருதுகளையும் இலக்கிய அமைப்புகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.

எழுதிய நூல்கள்

தொகு

மனிதநேயத் துளிகள் (ஹைக்கூ கவிதைகள் ) The Smile of Humanity (ஆங்கில மொழிபெயர்ப்பு ) மனசெல்லாம் (ஹைக்கூ கவிதைகள் ) வெளிச்சமொழியின் வாசிப்பு (புதுக் கவிதைகள் ) நான்.. நீ...இந்த உலகம் (தன்முனைக்கவிதைகள் தொகுப்பு ) வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள் (52 கவிஞர்கள் தொகுப்பு )

விருதுகள்

தொகு

1991 ல் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் இவருக்கு பாவேந்தர் பட்டயம் பாவேந்தரின் புதல்வர் மன்னர் மன்னன் வழங்கினார். 1999 ல் செய்யாறு தமிழ்ச்சங்கம் இவருக்கு " மனிதநேயக் கவிஞர் " எனும் விருதினை கவிஞர் கண்ணதாசனின் நண்பரான பேராசிரியர் வல்லம் வேங்கடபதி வழங்கினார் யூனியன் வங்கி இவரது சிறப்பு நேர்காணலை யூனியன் தாரா எனும் இதழில் வெளியிட்டு " News Maker " என பெருமிதத்தோடு வெளியிட்டு கொண்டாடியது 2016 ல் இவருக்கு மித்ரா துளிப்பா விருது வழங்கப்பட்டது 2017ல் தமிழ் கலை இலக்கிய மேம்பாட்டுக் கழகம் இவருக்கு மதிப்புறு தமிழன் எனும் விருதினை அளித்து பாராட்டியது. 2017 - 19 ல் இவருக்கு பல்வேறு முகநூல் குழுமங்கள் இவருக்கு நிலாக் கவிஞர், நக்கீரன் விருது, எழுத்துச் சிற்பி, ஹைக்கூ சிகரம், கபிலர் விருது, கவிச்சக்கரவர்த்தி விருது, கண்ணதாசன் விருது என இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை அளித்து பாராட்டியுள்ளன. செப்டம்பர் 22, 2019 ல் கம்போடியா நாட்டில் அங்கோர் தமிழ்ச் சங்கம் இவரது கவிதைப்பணிகளை பாராட்டி " சர்வதேச இளங்கோவடிகள் விருதினை " அளித்து பாராட்டியது. விருதினை கம்போடியா அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் செபீப் வழங்கினார். கவியுலகப் பூஞ்சோலை இலக்கிய அமைப்பின் தமிழ்த்தாய் விருது 2019 க்கு கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.