பயனர்:கிரிஜா ஜா/மணல்தொட்டி

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

ஈரடியால் உலகளந்தான் ஓரடியால் உலகளந்தவனையும் மிஞ்சிவிட்டாய் உன் ஈரடியில் தரணியே வியந்து நிற்க எண்திசைகளும் ஏறெடுக்க நானிலத்தவரும் தன்னவர் என்று கொண்டேத்த தலைமகனாய்ச் சிறந்த திருமகன் நீ ! பனையோலையில் உனது திருமுகம் நெடுங்காலமாய் வாழையடி வாழையாகத் தமிழினத்தின் செழுமையைச் செந்தமிழாய் வலம்வரச் செய்த திருமகன் நீ ! தமிழன்னைக்கு அணிகலனாய் விளங்கும் தலைமகனே உன் ஈரடியில் தோய்ந்தால் ஒளி வீசலாம் உலகில் விண்மீனாய்… வையத்துள் வாழ்வாங்கு வாழ அறநெறிகளை எளிய வழியில் எடுத்துரைத்த வித்தகன் நீ! மருத்துவனாய்ச் சட்டவல்லுநனாய் நுணுக்கமான கருவூலங்களைக் கட்டவிழ்த்த தலைமகனே! மனத்துக்கண் மாசிலனாதல் இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்று வாழ்க்கையின் தத்துவங்களை ஈரடியில் புரட்டிப் போட்ட வித்தகனே! தமிழ்மொழியின் அரிய பொருளிலக்கணத்தைக் காமத்துப்பாலில் தவழவிட்டுக் காளையருக்கும் கன்னியருக்கும் கடைக்கண் விருந்தளித்த தன்னிகர் அற்ற தலைவனே! இல்லை என்பதே இல்லாத செழுந்தமிழின் பல்துறை நாயகனே நீ வாழிய! வாழிய! வாழியவே!