பயனர்:சிவகாமசுந்தரி சிவப்பிரகாசம்/மணல்தொட்டி

கணினித்தமிழ் – நூல்நயம் பாராட்டல்

    கணினித்தமிழ் என்ற நூல் முனைவர் திரு. இல.சுந்தரம் அவர்களால் எழுதப்பட்டது. இந்நூல் கணினியைப் பற்றிய அறிமுக அறிவை தெளிவான எளிய நடையில் தருகிறது. முதல் பகுதியில் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விளக்கம் படங்களுடன் தரப்பட்டுள்ளது. தரவு உள்ளீட்டுச் சாதனங்கள், அவற்றின் இயக்கிகள், மற்றும் வெளியீட்டுச் சாதனங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. செயலியின் செயல்பாடு, வகைகள் மற்றும் பயன்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

இணையத்தில் தமிழின் பயன்பாடு அதற்கான மென்பொருள் வகைகள், முகநூல் போன்ற தொடர்பு அமைப்புகளில் தமிழின் பயன்பாடு பற்றி உரைக்கப்பட்டுள்ளன. வன்தட்டு, நிலைவட்டு, குறுவட்டு ஆகிய நினைவகங்கள் தரவுகளைச் சேமிக்கப் பயன்படுகின்றன. தமிழ் இணையக்கல்விக்கழகம் பல்வேறு வழிகளில் அகில உலக அளவில் தமிழை வளர்த்து வருகிறது. இக்கழகத்தின் இணையதளத்தில் மட்டுமன்றி, விக்கிப்பீடியா போன்ற இணையதளங்களிலும் அதிகமான தமிழ்க்கட்டுரைகள் அனுதினமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மொழிபெயர்ப்பு, இலக்கணப்பிழைத்திருத்தம், சந்திப்பிழைத்திருத்தம் ஆகியவற்றிற்கான மென்பொருட்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. தமிழில் தகவல் பரிமாற்றம், குறுந்தகவல், முகநூல் உரையாடல் தமிழின் இணையப் பயன்பாட்டில் மற்றுமொரு மைல்கல் ஆகும். இணையத்தின் வாயிலாகக் கருத்துப் பரிமாற்றம், கல்வி கற்றல் ஆகிய துறைகளில் தமிழின் பயன்பாட்டின் அறிமுகம் அதிக எண்ணிக்கையில் பயனர்களை ஈர்த்துள்ளது. திரு.நீச்சல்காரன் என்ற கணினி மென்பொருள் வல்லுநர் தமிழ் இணையக்கல்விக்கழகத்துடன் இணைந்து செயலாற்றிப் பலவிதமான செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளார். ஒருங்குகுறியின் பயன்பாட்டினால் தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு மொழிகளும் இணையத்தில் வலம் வருகின்றன. இது போன்று தமிழுக்கு அயராது தொண்டாற்றும் முனைவர் திரு.தெய்வசுந்தரம் மற்றும் மலேசியத் தமிழர் திரு.முத்துநெடுமாறன் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

கணினித்தமிழ் என்ற நூல் மிகப்பயனுள்ள செய்திகளை வழங்குகிறது