பயனர்:சிவசங்கரிசரவணன்/மணல்தொட்டி

எங்கள் ஊர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி என்பதாகும். கோயம்பத்தூரை கோவை என்றும் கொங்குநாடு என்றும் அழைப்பர்.மேலும் கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைப்பர். ”பொருள் ஆட்சி” என்பதே மருவி பொள்ளாச்சி ஆனது என்பர். பொள்ளாச்சியை சுற்றிலும் தென்னை மரங்கள் மிகுதியாக உள்ளன. எனவே இங்கு தேங்காய் விளைச்சல் அதிகம்.தென்னை மர தோப்புகளின் குளுமையும் அங்குள்ள வானிலையும் மனதை கொள்ளை கொள்வதாய் இருக்கும். இவ்வூரை சுற்றிலும் ஆழியாறு, சோலையாறு, பரம்பிக்குளம், மலம்புழா போன்ற அணைகளும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களும் அமைந்துள்ளன. பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை மாசாணிஅம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இங்கு வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஒன்று கூடுவர். கோவை மற்றும் பொள்ளாச்சியை சுற்றிலும் விவசாயம் ஒரு முக்கியத் தொழிலாக உள்ளது.காய்கறிகள்,பழங்கள்,நிலக்கடலை,கரும்பு மற்றும் இளநீர் போன்றவை அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.அவை சந்தைகளில் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்கப்படுகின்றன.தென் தமிழகத்தில் பொள்ளாச்சி சந்தை மிக பிரபலமானது. இங்கு சிறந்த பல கல்வி நிறுவன்ங்கள் உள்ளன, அவற்றுள் அமரர் நா.மகாலிங்கம் நிறுவிய என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் பல்வகை மாணவர்களின் வாழ்விலும் ஒளியேற்றி உலகளாவிய அளவில் புகழ் அடைந்துள்ளது.அவை நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி,நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரி போன்றவையாகும்.