பயனர்:சிவன் கோயில் காரிசேரி/மணல்தொட்டி

காரிசேரி சிவன் கோவில் தமிழ் நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள காரிசேரி என்ற கிராமத்தில் அர்ஜுனா நதி ஆற்றின் அருகில் மிகவும் பழமைவாய்ந்த சிவத்தலமாக அமைந்துள்ளது.

காரிசேரி சிவன் கோவில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: விருதுநகர்
அமைவு: காரிசேரி
ஆள்கூறுகள்: 9°30′41.12″N 77°51′30.74″E
கோயில் தகவல்கள்

வரலாறு

தொகு

கோயிலின் அருகில் வசித்துவரும் கிராம மக்கள் இக்கோயிலானது முன்னோர்கள் காலத்தில் வாழ்ந்து வந்த மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயிலாகும் என்று கூறுகின்றனர். இக்கோயிலானது பல வருடங்கள் பராமரிப்பு இல்லாமல், மூன்று கட்டடங்களைக் கொண்ட மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருந்ததாகவும், ஒரு கட்டடம் கீழே கருங்கற்களை வைத்துக் கட்டப்பட்டு மேலே ஒன்றும் இல்லாமலும் மற்ற இரண்டு கட்டடங்களும் முழுமையாக செங்கற்களைக் கொண்டு சுண்ணாம்பு வைத்து பூசப்பட்டு அதில் ஒரு கட்டடத்தின் உள்ளே சிவலிங்கச் சிலை மட்டும் கீழே சாய்ந்து கிடந்ததாகவும், அதன்பின்னர் அந்த சிவலிங்கச் சிலையை எடுத்து அருகில் இருந்த கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த இடத்தின் மேல் வைத்து வழிபாடு செய்து வந்ததாகவும் அருகில் வசிக்கும் கிராம மக்கள் கூறுகின்றனர். பின்னர் அருகில் உள்ள அடியார்கள் 2004-ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்யும் பொழுது சேதம் அடைந்த செங்கற்களைக் கொண்ட இரண்டு கட்டடங்களை அகற்றிவிட்டு பின்னர் அதே இடத்தில் 6 அடி கீழே அகழ்ந்த பொழுது கோயிலின் கட்டடக் கற்கள், இரண்டு சிலைகள் மற்றும் ஒரு சில பூஜை பொருட்களை மீட்டதாகவும், அந்த பூஜை பொருட்கள் மற்றும் இரண்டு சிலைகளையும் கோயிலின் அருகே வசித்துவரும் கிராம மக்கள் காரிசேரி கிராம நிர்வாக அதிகாரி, ஆமத்தூர் காவல் நிலையக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை வரவழைத்து தோண்டி எடுக்கப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் இரண்டு சிலைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் கையொப்பமிட்டு பேட்டி அளித்து கொடுத்துள்ளனர். பின்னர் இவ்விவரம் செய்தித் தாளில் வெளிவந்துள்ளது என்று கோயிலின் அருகில் வசித்துவரும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு