பயனர்:சுபஹரி/மணல்தொட்டி
சித்தேஸ்வரன் மலை
தொகுவார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி 2015 சித்தேஸ்வரன் மலை என்றும் பாலமலை என்றும் வழங்கப்படும் இம்மலை தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம்,அந்தியூர் அருகே 20கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சரியான பாதை இம்மலைக்கு போடப்படவில்லை.. இன்றும் இங்கு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .இங்குள்ள மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.இங்குள்ள குழந்தைகள் அரசு நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம்வகுப்பு வரை பயின்றபின் உயர்நிலை மற்றும் மேல்நிலைக்கல்விக்காக வேறு ஊர்களுக்கு செல்கின்றனர். இங்குள்ள சித்தேஸ்வரன் மலைக்கோவிலுக்கு புரட்டாசி மாதம் மக்கள் பெருவாரியாக செல்லுகின்றனர். புரட்டாசி மாத ஐந்து சனிக்கிழமைகளும் மலையடிவாரத்திலுள்ள குருவரெட்டியூர் வரை சிறப்பு பேருந்துகள் பவானி மற்றும் அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இம்மலையில் விளையக்கூடிய பழங்கள் தினசரி ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன