பயனர்:சுபாகரன்/மணல்தொட்டி
அட்டப்ப்பள்ளம் - Addappallam, near Nintavur in Amparai district in Sri Lanka. அட்டப்பள்ளம் என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரின் அருகில் உள்ள ஒரு கிராமம். அட்டப்பள்ளத்தை இப்போது பார்ப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதே அட்டப்பள்ளத்தில் ஒரு காலத்தில் தமிழ்ச்சங்கம் சிறப்புடன் இயங்கியது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இவ் அட்டப்பள்ளத்தின் பழைய பெயர் சிங்கரபுரி. இந்த சிங்கரபுரி ஒரு காலத்தில் மிகவும் எழில் வளத்துடன் செழித்து காணப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமை மிக மோசமாக உள்ளது. இச் சிங்காரபுரியை தலைநகராக வைத்து சில குறுநில மன்னர்கள் ஆட்சி நடத்தியுள்ளார்கள் என்பதை நம்மில் யார் அறிவார்... ஆண்ட பரம்பரை இன்று அடிமையாய் வீழ்ந்து கிடக்கிறது என்பது மிகவும் வேதனையான விடயம். ஆய்வு நடத்தும் கலைத்துறையினர் இதை கருத்தில் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மிகவும் பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் சில தகவலுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.
குறிப்பு: அட்டப்பள்ளத்தின் வரலாறு தெரிந்தவர்கள் தயவு செய்து இப்பக்கத்தில் பதிவேற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...