பயனர்:செல்வா/தமிழ்-3
தமிழ் எழுத்துக்களையும் 4 சிறு ஒலித்திரிபுக் குறியீடுகளையும் கொண்டு வட இந்திய மொழிகளில் வழங்கும் ஒலியன்களக் குறிப்பது எப்படி என்பது பற்றி கீழே எழுதியுள்ளேன். இவை தவிர F, Z ஆகியவற்றைக் குறிக்கவும் என் பரிந்துரைகளைத் தந்துள்ளேன். இது பற்றி நான் முன்னே தந்த இரண்டு பரிந்துரைகளையும்இங்கேயும், இங்கேயும் பார்க்கலாம். இந்த மூன்றாவது பரிந்துரை என் இரண்டாவது பரிந்துரையே ஆனால், முன்கொட்டாக இடும் குறிக்கு மாறாக எழுத்தை அடுத்து ஒலித்திரிபுக் குறிகளைப் பயன்படுத்தலாம் என்பதே. வேற்றுமொழியில் வழங்கும் க,ச,ட,த,ப வேறுபாடுகள் எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு ஒலித்திரிபுக்குறி இருந்தால் சீரான தமிழ் ஒலிப்பு முறைக்கு ஊறு விளையாமல் இருக்கும். சப்பானிய மொழியில் (நிப்பான் அல்லது நிஃகொன்?) வேற்றுமொழிச்சொற்களைக் குறிக்க கட்டகனா என்னும் எழுத்துமுறை இருப்பது போலவும் இதனைக் கருதலாம். பயனர்:செல்வா/தமிழ் என்னும் பக்கத்தில் கொடுத்துள்ள பரிந்துரைக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு இரட்டை பின்கொட்டுகளை வல்லின ஒலிகளுக்கு இடுவதே. இம்முறையால் ஒற்றை, இரட்டை மேற்கோள் குறிகளுடன் முரண்படாது. கருத்து என்னவென்றால், புதிய எழுத்து உண்டாக்குவதற்கு மாறாக ஒலித்திரிபுக் குறிகள் இட்டு கையாளலாம் என்பதே. F என்னும் எழுத்தொலியைக் குறிக்க ஃப என்னும் எழுத்தின் பயன்பாடும் இப்படிபட்டதே (ஃவ என்று இருந்தாலாவது பொருத்தமாக இருந்திருக்கும் என்பது வேறு செய்தி). இங்கு குறித்துள்ள முறைப்படி, Fa என்பதை வ' என்றோ வ˚ என்றோ, வ` என்றோ எழுதலாம்.
IAST முறைக்கு என் பரிந்துரை-3
தொகு
ka க" kha க": ga க' gha க':
ca ச" cha ச": ja ச' jha ச':
Ta ட" Tha ட": Da ட' Dha ட':
ta த" tha த": da த' dha த':
pa ப"' pha ப": ba ப' bha ப':
sha ச^ sa ச~ (அல்லது ச˘, ஸ) Sha ச^: (எ.கா உசா^:) ha அ'
மேலுள்ளதை அட்டவணையில் தேவநாகரி எழுத்துடன் ஒப்பிட்டும் காட்டியுள்ளேன்.
velars | palatals | retroflexes | dentals | labials | |
क [k] க" |
च [c] ச" |
ट [ʈ] ட" |
त [t̪] த" |
प [p] ப" |
unvoiced stops |
ख [kʰ] க": |
छ [cʰ] ச": |
ठ [ʈʰ] ட": |
थ [t̪ʰ] த": |
फ [pʰ] ப": |
aspirated unvoiced stops |
ग [g] க' |
ज [ɟ] ச' |
ड [ɖ] ட' |
द [d̪] த' |
ब [b] ப' |
voiced stops |
घ [gʰ] க': |
झ [ɟʰ] ச': |
ढ [ɖʰ] ட': |
ध [d̪ʰ] த': |
भ [bʰ] ப': |
aspirated voiced stops |
ङ [ŋ] ங |
ञ [ɲ] ஞ |
ण [ɳ] ண |
न [n] ந |
म [m] ம | |
य [j] ய |
र [r] ர |
ल [l] ல |
व [v] வ |
semi-vowels | |
श [ɕ] ச^ |
ष [ʂ] ச^: |
स [s] ச˜ (அல்லது) ச˘ |
sibilants | ||
ह [ɦ] அ' |
voiced fricative |