பயனர்:செ.சிங்காரவேலு/மணல்தொட்டி

கண்ணாங்குளம் (எனது ஊர்) தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியம் சீயாளம் ஊராட்சியை சார்ந்த கன்னாங்குளம் என்னும் இனிய சிற்றூர் எனது ஊர் ஆகும். பசுமையான மரங்கள் நிறைந்துள்ளதால் தூய காற்றும் சுவையான நிலத்தடி நீர்வளமும் நிறைந்த ஊராக விள்ங்குகிறது. எனது அதிர்ஷ்டம் நான் எனது சொந்த ஊரிலேயே ஆசிரியராக பணிபுரிகிறேன். ஊரின் நடுவில் சுமார் நான்கு ஏக்கர் மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய அழகிய மாரியம்மன் கோயில். அதன் எதிர்புறம் எனது பள்ளி. இவ்வழகிய பள்ளியில் பணியாற்ற இருவர் மட்டுமே கொடுத்துவைத்திருந்தோம். ஏனெனில் சுமார் 600 பேர் வசிக்கும் அக்கிராமத்தில் 5 முதல் 10 வயது பிள்ளைகள் 54 பேர் மட்டுமே.