பயனர்:செ. ரவிசங்கர்/மணல்தொட்டி

முனைவர் செ. ரவிசங்கர். தேனி மாவட்டத்தின் பெரியகுளம் தாலுகாவில் தென்கரை பேரூராட்சி கைலாசப்பட்டியில் 22.5.1981 ல் பிறந்தவர். பெற்றோர் செ. செல்லப்பா, செ. அழகுமணி அவர்கள். இவர் தம்து தொடக்கக் கல்வியை கைலாசப்பட்டியில் உள்ள சிவகாமி உதவிபெறும் துவக்கப் பள்ளியில் பயின்றவர். உயர்கல்வி மற்றும் மேனிலைக் கல்வியை விக்டோரியா நினைவு அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பயின்றவர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் பயின்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழிலக்கியம் பயின்று புதுக்கவிதைகளில் உவமைகள் எனும் தலைப்பில் முனைவர் பட்டம் முடித்தவர். பேராசிரியர் முனைவர். இரா. மோகன் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார் என்பது சிறப்பு. இவை தவிர முதுகலை சமூகவியல், பட்டயச் சான்றிதழ் மொழியியல், காந்தியச் சிந்தனை, முதுநிலை பட்டயம் ஒப்பியல் சமயம், சைவ சித்தாந்தம் ,கணினிப்பயன்பாடு போன்றவற்றை கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் கவிதை எழுதி கவிஞர் பட்டம் பெற்றுள்ளார். தற்பொழுது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியற்புலத்தின் ஒப்பிலக்கியத் துறையில் உதவிப் பேராசிரியாகப் பணிபுரிந்து வருகிறார். 100க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். 58 இளநிலை ஆய்வு மாணவர்களை உருவாக்கியுள்ளார்17முனைவர்ப் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கியிருக்கிறார்

எழுதிய நூல்கள்

1. உவமை உலா (2007), மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

2. தமிழிலக்கியத்தில் உவமை (2009), திருக்குறள் பதிப்பகம், சென்னை

3. தமிழாய்வுச் சிந்தனை (2010) . தியாகராய பிரசுரம், சென்னை.

4. தங்கமூர்த்தியின் கவிதையாக்கத்திறன், (2010), தியாகராய பிரசுரம், சென்னை

5. செம்மொழி தமிழிலக்கியத்திறன் (2011), சேகர் பதிப்பகம் , சென்னை

6. புதுமை இலக்கியப் பெட்டகம் (2012), சேகர் பதிப்பகம் , சென்னை

7. புதுக்கவிதைகளில் உவமைகள், (2013) காவ்யா பதிப்பகம், சென்னை

8. குலோத்துங்கனின் கவிதை வளம் (2014), உலகத்த்மிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை

9. செவ்விலக்கிய மதிப்புகள் (2014), மெய்யப்பன் பதிப்பகம், சென்னை

10. செவ்விலக்கிய தமிழ் (2014), ஞாலத்தமிழ் பண்பாட்டு மையம், மதுரை

11. இலக்கியமும் வாசிப்பும் (2014), ஞாலத்தமிழ் பண்பாட்டு மையம், மதுரை

12. தமிழிலக்கியப் போக்கு (தொகுதி - 1, 2), தமிழியற்புலம் வெளியீடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

13. ந நா .முத்துக்குமார் படைப்புகளில்

மானுடம்

14. செவ்விலக்கிய வாசிப்பு .

15. இரா.மோகனின் நினைவுகள்

16. தமிழில் கோட் பாட்டாய்வு உலகத்் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை

17. பேராசிரியர் இரா.மோகன் படைப்புலகம் 18. உ.வே.சா குறிப்புரை திறன் .

19. அவ்வை துரைசாமி புற நானு ற்று. உரைதிறன்

20. தொல்காப்பியம் சில நூண் ணாய்வு

21 - அற இலக்கியம்

22- தமிழ் இலக்கிய வரலாறு

23- தமிழர் மேலாண்மைச் சிந்தனை

24- தொழில் முனைவுத் தமிழ்

25. தமிழும் அறிவியலும்

26. தமிழகக் கலைகள்

கட்டுரை வெளியிட்ட இதழ்கள் :

1. காவ்யா தமிழ்

2. தமிழ் மாருதம்

3. புதிய கோடாங்கி

4. பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆண்டுமலர்

5 - நால்வர்

6 - உங்கள் நுலகம்

7 செந்தமிழ்

8 புதுப்புனல்

9. நவீனத் தமிழ்

10 செம்மொழித் தமிழ்,

11தினத்தமிழ் நாளிதழ்

தமிழ் பணிக்காக பாராட்டி பெற்ற விருதுகள் 1. ஒப்பியல் கலைமணி 2. தமிழாய்வுச் சுடர் 3தமிழ் நாடு 50 இளம் தமிழ் ஆய்வாளர் விருது 2018 _10_17 உட்பட 70 விருதுகளைப் பெற்றுள்ளார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரும் அறிந்த சான்றோர் வரிசையில் இவரும் ஒருவராக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.