பயனர்:ஜவகர்மலையப்பன்குமரகுருபரன்/மணல்தொட்டி

                                                    எனது ஊர்
                                                  
                             எழில் கொஞ்சும் நீண்ட கடற்கரையைக் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய வேதாரண்யம் வட்டத்தில் முல்லை நதியின் வலது கரையோரத்தில் அமைந்துள்ளது தாணிக்கோட்டகம் எனும் அழகிய ஊர்.

பெயர்க்காரணம்

இவ்வூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கோடியம்மன் ஆலயத்தின் தல விருட்சமாக தான்றி மரம் இருந்ததால் தான்றிகோட்டகம் என்ற பெயர் தோன்றி தாணிக்கோட்டகம் என்று மருவியுள்ளது. இவ்வூரின் கிழக்கு எல்லையில் 200 ஏக்கர் பரப்பளவில் கோட்டகம் என்று கூறக்கூடிய நீர் பிடிப்பு பகுதி இருப்பதால் தாணிக்கோட்டகம் என்ற பெயர் தோன்றியதாக கூறப்படுகிறது.

சிறப்பு

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதாக செவிவழிச்செய்தியாக கூறப்படும் மேற்கு பார்த்த சிவாலயம் சிறப்புடையது. தருமர் வழிபட்ட சிவாலயம் மட்டும் தற்போதும் உள்ளது. அதைச்சுற்றி மற்ற நால்வர் வழிபட்ட நான்கு சிவலிங்கங்கள் மட்டும் உள்ளது. ஊரின் தென் எல்லையில் பஞ்ச பாண்டவர்கள் சொக்கட்டான் விளையாட்டில் ஈடுபட்ட சொக்கட்டான் கரை எனும் இடம் உள்ளது.