பயனர்:டோராவெங்கி/மணல்தொட்டி
# பூமி மாற்றம்
தொகுஇந்த பிரபஞ்சத்தில் பூமி தோன்றி சுமார் 4600 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. பூமி தோன்றியது முதல் பல ஆயிரம் மாற்றங்களை கண்டுள்ளது.பாம்பு தனது தோலை சட்டை உரிப்பது போல பூமியும் தனது நிலையில் இருந்து தொடர்ந்து மாறிக்கொண்டு வருகிறது.இந்த மாற்றத்தின் காரணம் தான் கடல் தனியாகவும்,தரை தணியாகவும் சுமார் 71%,29% என பலவாறு பிரிந்தும் பரந்தும் உள்ளது.சுமார் 55 ஆயிரம் கோடி சதுர கி.மீ மேல் பரப்பு கொண்ட உருண்டையாக உள்ளது. நாம் பார்க்கும் பூமி அழியாது ஆனால் மாறும். நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் இவை ஒவ்வொரு சதவிகித மாற்றமும் மற்ற உயிர்களை விட மனிதனால் அதிகம். அறிவியல் வளர்ச்சியால் தொழிற்சாலை,அதனால் புகை,அதன் கழிவுகளால் மாற்றம்,நிலத்தில் கனிமங்கள் எடுத்தலும் மாற்றம் ஏற்படுத்துகிறது.[1] விலங்கினங்கள் நடந்தால் பாதை இல்லை.மனிதன் நடந்தால் “புல் பூண்டு தோன்றாமல் அழிந்து பாதை எளிதில் உருவாகிறது. மனிதனின் தேவை மீறிய செயல் “வாடகை தரா வீடு” போன்ற பூமியை பேரழிவுக்குதள்ளுகிறது. நீர் காசு கொடுத்து வாங்க தொடங்கிவிட்டோம். காற்று காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.ஒரு மனிதனுக்கு 1 மாதத்திற்கு கணக்கீடு பார்த்தால் 3 ஆக்ஸிஜன் காற்று சிலிண்டர் தேவை. இன்றைய சிலிண்டர் மதிப்புக்கு ரூ.2500 தேவைப்படும். நீருக்கு ரூ.2500 என்றால் நாம் வாழ்வது எப்படி. காற்று தயாரிக்கும் தொழிற்சாலை “மரம்” என்பது நாம் அறிந்தது.ஒவ்வொரு மரமும் ஒரு தொழிற்சாலை இப்படி ஒரு சூழலில் மனிதன் காடுகளையும்,மரங்களையும் அழிப்பது மிக மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதனும் ஆலமரம் போன்று பத்து மரங்களை நட்டால் அன்றி நாம் இந்த பூமியில் காசு செலவு இல்லாமல் வாழ சாத்தியம் இல்லை.எனவே பூமியை வீடு போல் பாதுகாத்து நீரை உயிர் போலபாதுகாத்து தேவைக்கு மட்டும் பயன்படுத்தி நமது சந்ததிக்கு இந்த பூமியை எந்த சேதமும் இல்லாமல் அப்படியே விட்டுச்செல்வது அவசியம்.
- ↑ . செப்டம்பர் 2015.