பயனர்:தமிழ்ப்பாவை பழனிவேலன்/மணல்தொட்டி

தனித்தமிழ்ப் போராளி புலவர் விழல்குடி பொதியப்பன் பழனிவேலனார் வாழ்வியல் குறிப்புகள்

தொகு
 
தனித்தமிழ்ப் போராளி புலவர் வி.பொ.பழனிவேலனார்


பிறப்பு  : திருத்துறைப்பூண்டி வட்டம், விழல்குடி என்னும் சிற்றூர்.

பெற்றோர் : சி . பார்வதி - நா . பொதியப்பன்

வளர்ப்பு : மன்னார்குடி வட்டம் , அரங்கநாதபுரம் எக்கல்.

பிறந்த ஆண்டு : திருவள்ளுவராண்டு 1940, துலைத் திங்கள் 14-ஆம் நாள், வியாழக்கிழமை,

30.10.1909.

இறப்பு : தி . பி . 2036, சிலைத்திங்கள் 5-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, 20.12.2005.

கல்வி

தொடக்கக்கல்வி : விழல்குடி , அரங்கநாதபுரம்

உயர்கல்வி : அரசர்மடம், ஒருத்தவன்நாடு

மேற்கல்வித்தகுதி

புலவர் பட்டம் : சென்னைப் பல்கலைக்கழகம்

கீழைக்கலைத் தேர்ச்சியாளர் : சென்னைப் பல்கலைக்கழகம்

கீ. க . தே., (B.O.L.,)

ஆசிரியர் பயிற்சி : அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, தஞ்சாவூர்.

பணி விவரம் : 1932 முதல், அரசு தொடக்கப் பள்ளி , நடுநிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்.

1950 முதல், அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்.

1968 பணிநிறைவு.

தமிழ்ப்பணிகள்

இதழ் வெளியீடு : மாணாக்கன் (தனித்தமிழ் மாதிகை)

1968 செப்டம்பர் முதல் 1975 வரை

தமிழ்க்கல்லூரி நடத்தியமை : 1972- 1975

மறைமலையடிகளார் மகளிர் தமிழ்ப்பயிற்றுக் கல்லூரி, திருத்துறைப்பூண்டி.

(மதுரைத்தமிழ்ச் சங்கத்தோடு இணைந்தது)

இயக்கங்களுடனான தொடர்பு :

உலகத் தமிழ்க் கழகம்

தமிழியக்கம்

தமிழின விடுதலைக் கழகம்

தமிழக நல்வாழ்வு மாமன்றம்

அளிக்கப் பெற்ற பட்டங்கள் :

தனித்தமிழரிமா

தமிழிசைச் செம்மல்

செந்தமிழ்க் காவலர்

பாவேந்தர் புகழ் பரப்புநர்

மொழிப்போர் மறவர்

பிற சிறப்புகள்

தமிழகப் புலவர் குழு உறுப்பினர் - 1979 முதல் தமிழக அரசின் தமிழ் மூதறிஞர் உதவித்தொகை பெற்றவர்.

தமிழ்த் தொண்டிற்காக இலண்டன் தமிழ்ச் சங்கத்தாரின் பாராட்டும் பரிசும் பெற்றவர் .

தமிழியக்கத்தின் தலைவராகவும், துணைத்தலைவராகவும் பணியாற்றியமையைப் பாராட்டி , பாவாணர் நூற்றாண்டு விழாவில் தமிழியக்கம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர் .

பாவாணருடன் இணைந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

விடுதலையிலும், தென்மொழியிலும் சில காலம் தொண்டாற்றியவர் .

எழுதிய நூல்கள்

வேலன் சிந்தனைப் பூங்கொத்து : தமிழ் மற்றும் பகுத்தறிவு தொடர்பான கட்டுரைத் தொகுப்பு.

மொழித்தூய்மை தேவையா ? : தாய்மொழியின் சிறப்பு , தனித்தமிழின் தேவை, மொழிக் கலப்பின் தீமை ஆகியன பற்றி விளக்கும் தனித்தமிழ் நூல்.

வேலா பிறமொழி - தமிழ் அகரமுதலி : தமிழ்ச் சொல் எது ? பிறமொழிச் சொல் எது? என்று புரியாமல் திகைப்பவர்களுக்கு உதவும் வகையில், உயர்திரு. வேலா அரசமாணிக்கம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, 1980 ஆம் ஆண்டு முதல் அரிதின் முயன்று தொகுத்த அகரமுதலி (1985).

திருத்துறைக்குறள் : மக்கள் வாழ்வு வளம்பெறச் செய்ய உதவும் குறள் வெண்பாக்களால் ஆகிய நூல்.

பண்டைத் தமிழர் வாழ்வியல் : பண்டைத் தமிழரின் வாழ்வியலையும், பண்பாட்டையும் இன்றுள்ளோர் உணர வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பட்டது.

திருக்குறள் தேர்பொருளுரை : திருக்குறளுக்கு மாறுபட்ட முறையில் எழுதப்பெற்ற உரை.

THAMIZH A UNIVERSAL LANGUAGE: தமிழ், உலகமொழிகளுக்கெல்லாம் தாய் என்பது உணரப்பட்ட, இக்காலத்திற்கேற்ற நூல்.

தமிழின் பெருமையினைத் தமிழறியாதவர்களும், அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலத்தில் ஆக்கப்பட்ட நூல் .

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் (1): பல்வேறு இதழ்களில் எழுதப்பெற்ற கட்டுரைகள் முதல் தொகுதி . தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்ற பொருண்மையில் எழுதப்பெற்ற 42 கட்டுரைகளின் தொகுப்பு நூல் .

தமிழ் அறிஞர்களுடனான தொடர்பு :

சாமி. சிதம்பரனார் (1925 முதல், இவர்தம் தனித்தமிழ்ப்பற்றிற்குக் காரணமானவர் )

தேவநேயப் பாவாணர்

முத்தமிழ்க்காவலர் கி . ஆ .பெ . விசுவநாதம்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

முனைவர் சி. இலக்குவனார் (உடன் பயின்றவர் - நண்பர் )

திருவள்ளுவரடிமை முருகு (நண்பர்)

திரு. வேலா அரசமாணிக்கம் (நண்பர்)

பேரா. பி. விருத்தாசலனார் (நண்பர்)

முனைவர் சாலை. இளந்திரையன் (நண்பர்)

முனைவர் சாலினி இளந்திரையன் (நண்பர்)

ஈரோடைப் புலவர் தி. மு . அரசமாணிக்கனார் (நண்பர் )

சொல்லாய்வுச் செம்மல்

குடந்தய்.வய். மு . கும்பலிங்கனார் (நண்பர் )

முனைவர் இரா. இளவரசு

முனைவர் மு. தமிழ்க்குடிமகன்

முனைவர் சி. இலக்குவனார் மறைமலை

முனைவர் இலக்குவனார் திருவள்ளுவன்

திரு. இறைக்குருவனார்

முனைவர் ந. அரணமுறுவல்

இதழ்களுடனான தொடர்பு : செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் , குறளியம், குத்தூசி, அறிவுப்பாதை, பகுத்தறிவு , விடுதலை , குடி அரசு , தமிழ்ப்பாவை , எழுகதிர் போன்ற இதழ்களில் தமிழ் வளர்ச்சி, பகுத்தறிவு தொடர்பான கட்டுரைகள், பாடல்கள் எழுதியவர்.

இந்தி எதிர்ப்பு : "ஆகாஷ்வாணி எதிர்ப்புநாள்" :1950 - சூன் திங்கள் , முத்தமிழ்க்காவலர் கி . ஆ . பெ . விசுவநாதம் அவர்களின் அறிக்கையைப் பின்பற்றி, இவர் மட்டுமல்லாது, தாம் பணிபுரிந்த பள்ளி மாணவர்களையும், தமிழுணர்வுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தார்.

அச்சேறவுள்ள பிற நூல்கள்

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் (2)

சங்கத்தமிழ் அகரமுதலி

ஆங்கிலக் கட்டுரைகள்

பாவரங்குகளில் பாடிய பாத்தொகுப்பு

PERIYAR A UNIVERSAL CONCEPT

கண்டதும் கேட்டதும்

வி . பொ . ப . சிந்தனைகள்